தவெக எம்.எல்.ஏ.விடம் ரூ. 35 கோடி பேரம்! செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் 3 பேர் கைது!தவெகவுக்கான ஆதரவில் கடுக்களவு குந்தகமும் ஏற்படாது! இடதுசாரிகள் முதல்வர் விஜய் குறித்து அவதூறு!அனிதா ராதாகிருஷ்ணன் முன்ஜாமீன் கோரி மனு! முதல்வர் விஜய்யுடன் இரு கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு! மாலை கூட்டத்தில் பங்கேற்பில்லை! அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகல்! தவெகவில் இணைகிறார்?அதிமுக மகளிரணி கூட்டம்: எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பங்கேற்கவில்லை!மத்திய குற்றப் பிரிவில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

மாயமான காக்கிநாடா குழந்தை எங்கே? துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்

மாயமான காக்கிநாடா குழந்தையை தேடும் காவல்துறை சார்பில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்

News image

துண்டு பிரசுரம் - பிரதி படம் - File photo

Updated On :1 ஜூலை 2026, 1:08 pm IST

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் கடந்த ஜூன் 6ஆம் தேதி காணாமல் போன 2 வயது குழந்தையின் நிலை இதுவரை என்னவென்று தெரியாத நிலையில், வெட்டாபுரம் காவல்துறையினர், மக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வருகிறார்கள்.

குழந்தையின் புகைப்படம், விவரங்கள், காணாமல் போனது குறித்த தகவலுடன், குழந்தையைப் பற்றி ஏதேனம் தகவல் தெரிந்தாலோ அல்லது அன்றைய நாளில் குழந்தையை எங்கேனம் பார்த்திருந்தாலோ தகவல் தெரிவிக்குமாறு தொலைபேசி எண்களுடன் துண்டுப் பிரசும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

குழந்தையைக் கண்டுபிடிக்க பயனுள்ள தகவல்களை தருபவர்களுக்கு ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது.

குழந்தை எங்கே?

துனி என்ற கிராமத்தில் குழந்தை காணாமல் போன நிலையில், மூன்று வாரங்கள் ஆகியும் டிரோன்கள் மூலமும், 400 காவல்துறையினர் தேடியும் இதுவரை ஒரு சிறு துப்பு கூட கிடைக்கவில்லை என்பது மிகப்பெரிய பின்னடைவாக உள்ளது.

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் பாமாயில் பண்ணைக்கு அருகே வாழ்ந்து வந்த தம்பதிகளின் 2 வயது குழந்தையை பேரிடர் மீட்புப் படை வீரர்களும் தேடி வருகிறார்கள். தொடர்ந்து தேடுதல் பணி நீட்டிக்கப்பட்டுள்ளது.

முதலில், வனவிலங்குகள் ஏதேனும் குழந்தையை தூக்கிச் சென்றிருக்குமா என்ற அச்சம் ஏற்பட்டது. எனவே காவல்துறையினர், வனப்பகுதிக்கு அருகே பொம்மைகளை உருவாக்கி அதற்குள் கறித் துண்டுகளை வைத்தனர். ஆனால், அந்த பொம்மை இருக்கும் இடத்துக்கு அருகே எந்த வன விலங்கும் வரவில்லை. எனவே, வன விலங்கு குழந்தையை தூக்கிச் சென்றிருக்கும் என்பதை உறுதி செய்ய முடியாமல் போனது.

தற்போது காணாமல் போன குழந்தை பற்றி ஏதேனும் துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

வீட்டுக்கு வெளியே குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது, தந்தை பண்ணைக்குச் செல்வதைப் பார்த்து அவர் பின்னால் சென்றிருக்கிறது. தந்தையும் குழந்தையை தூக்கிக் கொண்டு வந்த வீட்டு வாசலில் விட்டுவிட்டு, மனைவியிடம் குழந்தையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டுக் கிளம்பியிருக்கிறார்.

மனைவியோ, குழந்தை வீட்டுக்குள்தானே இருக்கிறது என்று நினைத்திருக்கிறார். ஆனால், குழந்தை வாசலை தாண்டி வெளியே சென்ற நிலையில் மாயமானது தெரிய வந்து காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.

குழந்தையுடன் மாயமான நாய் 2 நாள்களில் திரும்பி வந்தது. ஆனால், அசாதாரணமாக தென்பட்ட நாய் உணவெதுவும் சாப்பிடாமல் இறந்துவிட்டது இன்னமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வந்தாலும், குழந்தைக்கு என்னவாகியிருக்கும் என்ற கேள்விக்கு இன்னும் விடைதெரியாமல் கலங்கி நிற்கிறது ஒட்டுமொத்த கிராமமும்.

Summary

Where is the missing Kakinada child? Leaflets distributed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.