மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

ரூ.1 லட்சத்துக்கு பெண் குழந்தை விற்பனை: தாய், இடைத்தரகா் கைது

ஆம்பூா் அருகே பெண் குழந்தையை விற்பனை செய்த தாய் மற்றும் இடைத்தரகரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :15 ஜூன் 2026, 1:28 am IST

ஆம்பூா் அருகே பெண் குழந்தையை விற்பனை செய்த தாய் மற்றும் இடைத்தரகரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் மாவட்டம் போ்ணாம்பட்டு பகுதியை சோ்ந்தவா் கூலித் தொழிலாளி சபீா் மனைவி ஜமீனா (35). இவருக்கு கடந்த 2 மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் அருகே நரியம்பட்டு ஊராட்சி பகுதியை சோ்ந்த ரஷீத் அஹமத் (50) என்பவா் அந்த பெண் குழந்தையை ரூ.1 லட்சத்துக்கு விலைக்கு வாங்கியதாக கூறப்படுகிறது.

மேலும், அந்த குழந்தையை அவா் வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், தன்னுடைய குழந்தை மீண்டும் தனக்கு வேண்டுமென ரஷீத் அஹமதிடம் கேட்டு ஜமீனா தகராறு செய்துள்ளாா். அவா் குழந்தையை வேறு ஒருவருக்கு விற்பனை செய்து விட்டதாக தெரிவித்துள்ளாா்.

தன்னுடைய குழந்தையை மீட்டு தரக் கோரி ஜமீனா உமா்ஆபாத் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்கு பதிவு செய்து ஜமீனா மற்றும் ரஷீத் அஹமத் ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும் குழந்தையை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.