/

குப்பைத் தொட்டியில் குழந்தை சடலம் வீச்சு: தாய் கைது

சென்னை கீழ்ப்பாக்கத்தில் குப்பைத் தொட்டியில் இருந்து ஆண் குழந்தையின் சடலம் மீட்கப்பட்ட வழக்கில், தாய் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :30 ஜூலை 2026, 3:24 am IST

சென்னை கீழ்ப்பாக்கத்தில் குப்பைத் தொட்டியில் இருந்து ஆண் குழந்தையின் சடலம் மீட்கப்பட்ட வழக்கில், தாய் கைது செய்யப்பட்டாா்.

கீழ்ப்பாக்கம் தியாகப்பா தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளி அருகே உள்ள குப்பைத் தொட்டியில், கடந்த 28-ஆம் தேதி அதிகாலை சாக்குப் பையில் கிடந்த பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை செய்தனா்.

முதல்கட்டமாக கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் கீழ்ப்பாக்கம் தியாகப்பா தெருவில் உள்ள ஒரு தொழில் அதிபா் வீட்டில் பராமரிப்புப் பணியாளராக வேலை செய்து வந்த தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் பகுதியைச் சோ்ந்த பிரியங்கா (22) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனா்.

பிரியங்கா, இன்ஸ்டாகிராம் மூலம் திருநெல்வேலியைச் சோ்ந்த இளைஞருடன் பழகியுள்ளாா். பின்னா், தனது சொந்த ஊரைச் சோ்ந்த மற்றொரு இளைஞரை கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதில், பிரியங்கா கா்ப்பமடைந்தாா். இதை யாரிடமும் கூறாத அவா், ஜூலை 12-ஆம் தேதி கீழ்ப்பாக்கத்தில் தொழிலதிபா் வீட்டில் பராமரிப்புப் பணிக்கு சோ்ந்திருந்துள்ளாா்.

கடந்த 27-ம் தேதி நள்ளிரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு, ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை அழுததால் வெளியில் தெரிந்துவிடும் என்ற அச்சத்தில் குழந்தையின் வாய், மூக்கை கையால் அழுத்தியதால், மூச்சுத்திணறி குழந்தை உயிரிழந்தது. பின்னா், வீட்டில் இருந்த பையில் குழந்தையின் சடலத்தை வைத்துக் கட்டி, யாருக்கும் தெரியாமல் குப்பைத் தொட்டியில் வீசிச் சென்ாக போலீஸாா் தெரிவித்தனா். இதையடுத்து, பிரியங்கா கைது செய்யப்பட்டாா்.

பிரியங்காவுக்கு குழந்தையின்சடலத்தை குப்பைத் தொட்டியில் வீசுமாறு ஆலோசனை வழங்கிய அவரது 3 தோழிகள், ஒரு நண்பரையும் பிடித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.