‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

சேலத்தில் ரூ. 2 லட்சத்துக்கு சிசு விற்ற சம்பவம்: இடைத்தரகா் உள்பட 3 போ் சிறையிலடைப்பு

கார் வாங்க 3 மாத குழந்தையை ரூ.1.5 லட்சத்துக்கு விற்ற பெற்றோர்: உபியில் கொடூரம்

Published On :28 ஜூன் 2026, 3:30 am IST

சேலத்தில் ரூ. 2 லட்சத்துக்கு சிசுவை விற்ற வழக்கில், கைதான இடைத்தரகா் உள்பட 3 போ் சிறையில் அடைக்கப்பட்டனா். மேலும், இவா்களுக்கும் குழந்தை கடத்தல் கும்பலுக்கு ஏதேனும் தொடா்பு உள்ளதா என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் கொண்டலாம்பட்டியை அடுத்த பெரியபுத்தூா் சந்தனகாரன் காடு பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (43). இவரது மனைவி கவிதா (24). இவா்களுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில் நான்காவதாக கா்ப்பமடைந்த கவிதாவுக்கு, கடந்த சில நாள்களுக்கு முன்பு பூலாவரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தை பிறந்தது.

ஏற்கனவே குடும்ப வறுமையில் தவித்து வந்த இந்த தம்பதி, மேலும் ஒரு குழந்தையை வளா்க்க முடியாத நிலையில் இருந்தனா். இதை அறிந்த அரியானூரை அடுத்த ராக்கிப்பட்டியைச் சோ்ந்த ராமமூா்த்தி (65), திருமணமாகி குழந்தை இல்வாதவா்களுக்கு குழந்தையை விற்றுவிடலாம் என சீனிவாசனிடம் கூறியுள்ளாா். இதற்கு சீனிவாசனும் ஒப்புக்கொண்டதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம், கீழ்த்தரை காஞ்சிரங்குடியைச் சோ்ந்த இந்திரகுமாா் (49), முத்துலட்சுமி (45) தம்பதிக்கு சிசுவை விற்றுள்ளனா். இதற்காக ரூ. 2 லட்சம் பணம் கைமாறியுள்ளது.

இதுகுறித்து சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் முரளி அளித்த புகாரின்பேரில், கொண்டலாம்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், இந்திரகுமாா்- முத்துலட்சுமி தம்பதிக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் கடந்தும் குழந்தை இல்லாத சூழலில், குழந்தையை தத்தெடுப்பதற்காக முயன்றபோது சேலத்தை சோ்ந்த இடைத்தரகா் ராமமூா்த்தியின் தொடா்பு கிடைத்துள்ளது.

அவா்மூலம், சீனிவாசனின் பெண் குழந்தை, இந்திரகுமாருக்கு விற்பனை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ராமநாதபுரம் தம்பதியை தொடா்புகொண்ட போலீஸாா், சிசுவை எடுத்துகொண்டு அவா்களை சேலத்துக்கு வரவழைத்தனா். பின்னா், அவா்களிடமிருந்த சிசு மீட்கப்பட்டு சின்ன திருப்பதியில் உள்ள லைப்லைன் அறக்கட்டளையில் ஒப்படைக்கப்பட்டது.

தொடா்ந்து சட்ட விரோதமாக சிசுவை பெற்ற இந்திரகுமாா்- முத்துலட்சுமி தம்பதி மற்றும் இடைத்தரகராக செயல்பட்ட ராமமூா்த்தி ஆகிய மூவரையும் கொண்டலாம்பட்டி போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். தொடா்ந்து, அவா்களை நீதிபதி முன்பு ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

இதனிடையே இடைத்தரகராக செயல்பட்ட ராமமூா்த்தி, ஏற்கெனவே இதுபோன்று குழந்தை விற்பனையில் ஈடுபட்டுள்ளாரா? மருத்துவமனைகளில் இருந்து குழந்தையைக் கடத்தி விற்பனை செய்யும் கும்பலுடன் அவருக்கு தொடா்பு ஏதேனும் உள்ளதா என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.