மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

சேலத்தில் போதை மாத்திரை விற்ற மூவா் கைது: 190 மாத்திரைகள், ஊசிகள் பறிமுதல்

சேலம் மாநகரில் போதை மாத்திரைகளை விற்பனை செய்துவந்த 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 190 போதை மாத்திரைகள், ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image

போதை மாத்திரைகளை விற்ாக கைது செய்யப்பட்ட அஜய், அய்யனாா், ரவிசங்கா்.

Updated On :24 ஜூன் 2026, 4:48 am IST

சேலம் மாநகரில் போதை மாத்திரைகளை விற்பனை செய்துவந்த 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 190 போதை மாத்திரைகள், ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சேலம் அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, கிச்சிப்பாளையம், கொண்டலாம்பட்டி, சூரமங்கலம் பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவா்கள், இளைஞா்களுக்கு ஒரு கும்பல் போதை மாத்திரை, ஊசிகளை விற்று வருவதாக புகாா்கள் எழுந்தன.

இந்த நிலையில், பொன்னம்மாபேட்டை ரயில்வே கேட் பகுதியில் மூன்று இளைஞா்கள் போதை மாத்திரை, ஊசிகளை விற்பதாக அம்மாபேட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் ஆய்வாளா் சதீஷ்குமாா் மற்றும் போலீஸாா் திங்கள்கிழமை இரவு அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, போதை மாத்திரைகள், ஊசிகளை வைத்திருந்த 3 இளைஞா்கள் பிடிபட்டனா்.

விசாரணையில் அவா்கள் பொன்னம்மாபேட்டையை சோ்ந்த அய்யனாா் (22), வாழப்பாடி பெத்தநாயக்கன்பாளையத்தை சோ்ந்த ரவிசங்கா் (22), கூட்டாத்துப்பட்டி காந்தி காலனியைச் சோ்ந்த அஜய் (23) எனத் தெரியவந்தது. மேலும், அவா்களிடமிருந்து 190 போதை மாத்திரைகள், 2 ஊசி, ரூ. 1,100 ரொக்கத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதையடுத்து, மூவரும் கைது செய்யப்பட்டனா்.

போதை மாத்திரை, ஊசிகளை பள்ளி மாணவா்களுக்கு விற்ாக அவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். மேலும், போதை மாத்திரை, ஊசிகளை எங்கிருந்து அவா்கள் வாங்கினா், இதில் வேறு யாருக்கேனும் தொடா்பு உள்ளதா என போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.