தோனியின் வெற்றி ரகசியம் : பத்ரிநாத்

மகேந்திர சிங் தோனியின் வெற்றி ரகசியம் வெற்றி தோல்விகளின் போது உணர்சிகளை காட்டாமல் அமைதியாக இருப்பதுதான் என முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் பத்ரிநாத் கூறியுள்ளார். 
படம்: டிவிட்டர் | பத்ரிநாத்
படம்: டிவிட்டர் | பத்ரிநாத்

மகேந்திர சிங் தோனியின் வெற்றி ரகசியம் வெற்றி தோல்விகளின் போது உணர்சிகளை காட்டாமல் அமைதியாக இருப்பதுதான் என முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் பத்ரிநாத் கூறியுள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் மிகவும் வெற்றிப்பெற்ற அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வளர்ந்து வந்துள்ளது. இதுவரை சிஎஸ்கே அணி 4 முறை தோனி தலைமையில் கோப்பையை வென்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பத்ரிநாத் சிஎஸ்கே அணிக்காக 95 போட்டிகளில் விளையாடி 1441 ரன்கள் எடுத்துள்ளார்.

தோனியிடம் ஒரு விஷயம் மிகவும் பிடிக்கும். அதே விசயம்தான் பிடிக்காமலும் இருக்கும். அது என்னவென்றால், நாங்கள் சிறப்பாக விளையாடி ஆட்டத்தில் வெற்றிப் பெற்றிருப்போம். ஆனால் அவர் அதற்கு எதுமே எதிர் வினையாற்ற மாட்டார். கோப்பையை வாங்கி எங்களிடம் கொடுத்து விட்டு அமைதியாக சென்றுவிடுவார். ஒருநாள் ஆர்சிபி அணியிடம் மிகவும் மோசமாக விளையாடி 120 ரன்களுக்கு ஆட்டமிழந்தோம். அவர் அப்போதும் அமைதியாக இருந்தார். இவர் என்ன மாதியான மனிதன் என்று வியந்துள்ளேன். எப்படி ஒரு மனிதனால் வெற்றி, தோல்விகளின் போது எதிர்வினையாற்றாமல் உணர்சிகளை வெளிக்காட்டாமல் அமைதியாக இருக்க முடியும்! அதுதான் அவரிடம் மிகவும் பிடிக்கும். அதுதான் அவரின் வெற்றியின் ரகசியம். அவரிடமிருந்து ஏராளமானதைக் கற்றிருக்கிறேன். உணர்சிகளை கட்டுப்படுத்தும்போது நம்மால் தெளிவான முடிவு எடுக்க முடியும்.

எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டுமானால், எனக்கு ஒரு பந்து வீச்சாளரை பிடிக்கவில்லை என்றால், அவரது ஓவரை அடிக்க வேண்டும் என ஒரு வெறி பிறக்கும். அதனால் தவறான ஷாட் ஆடி ஆட்டமிழப்போம். இதுதான் உணர்ச்சிகளுக்கு பலியாவது. நாம் பந்துகளுடன்தான் விளையாட வேண்டுமே தவிர பந்து வீசுபவர்களுடன் இல்லை.

உணர்சிகளுக்கு ஆட்படாமல், அந்த தருணத்தில் இருக்க வேண்டும். அதுதான் தோனியிடமிருந்து கற்றுக்கொண்டேன். இது மிகப்பெரிய விசயம். இதை நடைமுறைப்படுத்த முயற்சித்து வருகிறேன். தோனி பிறப்பிலே ஒரு திறமைசாலி!” என பத்ரிநாத் இளைஞர்களுக்கு அறிவுரைக் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com