ஹாட்ரிக் எடுத்த இங்கிலாந்து: நியூசிலாந்து திடீர் சரிவு

​இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி திடீர் சரிவைச் சந்தித்துள்ளது. 
ஹாட்ரிக் எடுத்த இங்கிலாந்து: நியூசிலாந்து திடீர் சரிவு


இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி திடீர் சரிவைச் சந்தித்துள்ளது. 

இங்கிலாந்து, நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 132 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து 9 ரன்கள் முன்னிலைப் பெற்று 141 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதன்பிறகு, நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இதன் தொடக்கமும் நியூசிலாந்துக்கு மோசமாக அமைந்தது. வில் யங் (1), கேப்டன் கேன் வில்லியம்சன் (15), டாம் லாதம் (14), டெவான் கான்வே (13) ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேற அந்த அணி 56 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இதன்பிறகு, டேரில் மிட்செல் மற்றும் டாம் பிளன்ட்வெல் சிறப்பான பாட்னர்ஷிப்பை கட்டமைத்தனர். அரைசதம் கடந்து சதத்தை நெருங்கிய இருவரும் 2-ம் நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட்டுகள் விழாதவாறு பார்த்துக்கொண்டனர். 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்திருந்தது. மிட்செல் 97 ரன்களுடனும், பிளன்ட்வெல் 90 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த நிலையில், 3-ம் நாள் ஆட்டம் இன்று (சனிக்கிழமை) தொடங்கியது. மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

தாமதத்துக்குப் பிறகு ஆட்டம் தொடங்கியது. 3-ம் நாள் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே மிட்செல் சதத்தை எட்டினார்.

சதத்தைக் கடந்து 108 ரன்கள் எடுத்திருந்த மிட்செல், ஸ்டுவர் பிராட் வீசிய 84-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்து பந்திலேயே புதிதாகக் களமிறங்கிய காலின் டி கிராண்ட்ஹோம் ரன் அவுட் ஆனார். இதையடுத்து, கைல் ஜேமிசன் களமிறங்கினார். அவர் முதல் பந்திலேயே போல்டாகி டக் அவுட் ஆனார்.

இது இங்கிலாந்து ஒரு அணியாக வீழ்த்திய ஹாட்ரிக் விக்கெட்.

சற்று முன் வரை நியூசிலாந்து அணி 85 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்து 246 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. பிளன்ட்வெல் 94 ரன்களுடனும், டிம் சௌதி 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com