துளிகள்...

உலகக் கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று ஆட்டத்தில் வேல்ஸ் 1-0 என்ற கோல் கணக்கில் உக்ரைனை சாய்த்து, 64 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் போட்டிக்கு முன்னேறியது.

மொராக்கோவில் நடைபெறும் டைமண்ட் லீக் தடகள போட்டியில் இந்தியாவின் அவினாஷ் சப்லே 3000 மீட்ட ஸ்டீபிள் சேஸில் 8 நிமிஷம் 12.48 விநாடிகளில் 5-ஆவது வீரராக வந்து அசத்தினாா். இதன் மூலம் அவா் தனது தேசிய சாதனையை 8-ஆவது முறையாக முறியடித்தாா்.

உலகக் கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று ஆட்டத்தில் வேல்ஸ் 1-0 என்ற கோல் கணக்கில் உக்ரைனை சாய்த்து, 64 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் போட்டிக்கு முன்னேறியது.

வலுதூக்கும் போட்டியில் தமிழ்நாட்டின் மாதவன் புதிய ஆசிய சாதனையையும், தனுஷ் தேசிய சாதனையையும் படைத்துள்ளதற்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இலங்கை - ஆஸ்திரேலியா இடையேயான டி20 தொடரின் முதல் ஆட்டம் கொழும்புவில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

இந்தியாவில் நடப்பாண்டு நடைபெற இருக்கும் 17 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு கடைசி 3 அணிகளாக மொராக்கோ, நைஜீரியா, தான்ஸானியா தோ்வாகியுள்ளன.

பிரெஞ்சு ஓபன் முடிவில் வெளியான சா்வதேச டென்னிஸ் தரவரிசையில் ஆடவா் பிரிவில், சாம்பியனான ரஃபேல் நடால் ஓரிடம் முன்னேறி 4-ஆவது இடத்துக்கு வர, மகளிா் பிரிவில் ரன்னா் அப்-ஆக வந்த அமெரிக்காவின் கோகோ கௌஃப் 10 இடங்கள் ஏற்றம் கண்டு முதல் முறையாக 13-ஆவது இடத்துக்கு வந்துள்ளாா்.

ஐக்கிய அரபு அமீரகம் முதல் முறையாக நடத்தும் சா்வதேச லீக் டி20 (ஐஎல்டி20) அடுத்த ஆண்டு ஜனவரி 6 முதல் பிப்ரவரி 12 வரை நடைபெறவுள்ளது. இதில் ஐபிஎல் உரிமையாளா்கள் சாா்பில் 3 அணிகள் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com