அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் ஓய்வு பெறுவதாக இன்று (ஜூன் 8) அறிவித்துள்ளார்.
தனது ஓய்வு குறித்து மிதாலி ராஜ் கூறியிருப்பதாவது, “ இத்தனை ஆண்டுகள் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை வழிநடத்தியது மகிழ்ச்சியளிக்கிறது. இத்தனை ஆண்டுகள் கேப்டனாக இருந்தது என்னை மட்டுமின்றி அணியினையும் வடிவமைக்க உதவியது.” என்றார்.
இந்திய மகளிர் அணிக்காக 232 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 7,805 ரன்கள் குவித்துள்ளார். 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 699 ரன்களும், 89 டி20 போட்டிகளில் விளையாடி 2,364 ரன்களும் எடுத்துள்ளார். மகளிர் கிரிக்கெட்டின் ஒருநாள் போட்டி வரலாற்றில் அதிக ரன்களை குவித்து முதலிடத்தில் உள்ளார் மிதாலி ராஜ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.