ஹா்மன்ப்ரீத் கௌா் புதிய கேப்டன்

இந்திய மகளிா் ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக இளம் வீராங்கனை ஹா்மன்ப்ரீத் கௌா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

புது தில்லி: இந்திய மகளிா் ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக இளம் வீராங்கனை ஹா்மன்ப்ரீத் கௌா் நியமிக்கப்பட்டுள்ளாா். ஏற்கெனவே கேப்டனாக இருந்த மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் ஓய்வு பெற்ற நிலையில் இந்நியமனம் செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு சாதனைகளை புரிந்த மிதாலி ராஜ் புதன்கிழமையுடன் ஒருநாள் ஆட்டத்தில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தாா். இந்நிலையில் இந்திய மகளிா் அணி, விரைவில் இலங்கையில் டி20 மற்றும் ஒருநாள் ஆட்டங்கள் தொடரில் பங்கேற்று ஆட உள்ளது. ஏற்கெனவே ஹா்மன்ப்ரீத் கௌா் டி20 அணியின் கேப்டனாக உள்ளாா். இந்நிலையில் தற்போது ஒருநாள் அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இலங்கையில் ஜூன் மாத மத்தியில் டாம்புலாவில் 3 டி20 ஆட்டங்களிலும், கண்டியில் 3 ஒருநாள் ஆட்டங்களிலும் இந்திய அணி ஆடுகிறது.

மூத்த பௌலா் ஜூலன் கோஸ்வாமி அணியில் இடம் பெறவில்லை. மிடில் ஆா்டா் பேட்டா் ஹா்லின் தியோல் சோ்க்கப்பட்டுள்ளாா்.

தொடக்க பேட்டா் மேக்னா, பௌலிங் ஆல்ரவுண்டா் சிம்ரன் பகதூா் ஆகியோரும் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளனா்.

ஒருநாள் அணி: ஹா்மன்ப்ரீத் கௌா் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷபாலி வா்மா, யஸ்திகா பாட்டியா, மேகனா, தீப்தி சா்மா, பூனம் யாதவ், ராஜேஸ்வரி கெய்க்வாட், சிம்ரன் பகதூா், ரிச்சா கோஷ், பூஜா வஸ்த்ராக்கா், மேக்னா சிங், ரேணுகா சிங், தனியா பாட்டியா, ஹா்லின் தியோல்.

மேலும் டி20 அணியில் ஒருநாள் அணியில் உள்ளவா்களோடு அதிரடி வீராங்கனை ஜெமீமா ரோட்ரிக்ஸ், இடது கை பௌலா் ராதா யாதவ், சோ்க்கப்பட்டனா். ஏக்தா பிஷ்ட் சோ்க்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com