டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து வெற்றி பெற 299 ரன்கள் தேவை
By DIN | Published On : 14th June 2022 06:10 PM | Last Updated : 14th June 2022 06:10 PM | அ+அ அ- |

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 299 ரன்கள் தேவைப்படுகிறது.
ஐந்தாம் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மிட்சல் 62 ரன்களுடன் கடைசி வரைக்கும் ஆட்டமிழக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
299 ரன்கள் தேவை என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜாக் கிராவ்லி ரன் ஏதும் எடுக்காமல் போல்ட் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். அலெக்ஸ் லெஸ் 30 ரன்களுடனும், போப் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
உணவு இடைவேளைக்கு முன்பு வரை இங்கிலாந்து அணி 36 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது. இங்கிலாந்து வெற்றி பெற இன்னும் 263 ரன்கள் தேவை. நியூசிலாந்து வெற்றி பெற 9 விக்கெட்டுகள் தேவை. இந்த இரண்டும் நடக்கவில்லை எனில் போட்டி டிராவில் முடிவடைந்ததாக அறிவிக்கப்படும்.