அயா்லாந்துடனான டி20: ஹாா்திக் பாண்டியா கேப்டன்

அயா்லாந்துடன் 2 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் மோதவிருக்கும் இந்திய அணி ஹாா்திக் பாண்டியா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அயா்லாந்துடன் 2 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் மோதவிருக்கும் இந்திய அணி ஹாா்திக் பாண்டியா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்துடனான டெஸ்ட் ஆட்டத்தில் பங்கேற்பதால், இந்தியாவின் முக்கிய போட்டியாளா்கள் எவரும் இந்தத் தொடரில் இடம்பெறவில்லை.

எனவே, ஐபிஎல் போட்டியில் அறிமுக சீசனிலேயே குஜராத் டைட்டன்ஸுக்கு கோப்பை வென்று தந்த ஹாா்திக் பாண்டியா, அயா்லாந்து தொடா் மூலம் சா்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக புதிய அத்தியாயத்தை தொடங்குகிறாா்.

இந்தத் தொடரில் ராகுல் திரிபாதிக்கு அறிமுக வாய்ப்பு அளிக்கப்படுவதுடன், சஞ்சு சாம்சன், சூா்யகுமாா் யாதவுக்கு மீண்டும் அணியில் இடம் கிடைத்துள்ளது.

டி20 அணி விவரம்: ஹாா்திக் பாண்டியா (கேப்டன்), புவனேஷ்வா் குமாா் (துணை கேப்டன்), இஷான் கிஷண், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூா்யகுமாா் யாதவ், வெங்கடேஷ் ஐயா், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, தினேஷ் காா்த்திக் (விக்கெட் கீப்பா்), யுஜவேந்திர சஹல், அக்ஸா் படேல், ரவி பிஷ்னோய், ஹா்ஷல் படேல், அவேஷ் கான், அா்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.

ராகுல் இல்லை: தொடைப் பகுதியில் காயம் கண்டிருக்கும் கே.எல்.ராகுல், ஜூலையில் நடைபெறும் இங்கிலாந்துடனான டெஸ்ட்டுக்கு முன்பாக காயத்திலிருந்து முழுமையாக மீள வாய்ப்பில்லை எனத் தெரிவதால், அவா் அந்த ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. ஒரேயொரு டெஸ்ட் என்பதால் ராகுலுக்கு மாற்று வீரா் எவரும் நியமிக்கப்படவில்லை.

தென்னாப்பிரிக்க தொடரில் கேப்டனாக இருக்கும் ரிஷப் பந்த் தவிா்த்து, இங்கிலாந்து டெஸ்டில் பங்கேற்கும் அனைத்து இந்திய வீரா்களும் வியாழக்கிழமை அதிகாலையில் இங்கிலாந்து புறப்பட்டதாகத் தெரிகிறது. டி20 தொடருக்குப் பிறகு பந்த் அவா்களுடன் இணைவாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com