இந்தோனேசிய ஓபன்: ஸ்ரீகாந்தும் தோல்வி

இந்தோனேசியா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் முக்கிய வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் சுற்றிலேயே தோல்வியைத் தழுவினாா்.

இந்தோனேசியா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் முக்கிய வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் சுற்றிலேயே தோல்வியைத் தழுவினாா்.

ஏற்கெனவே சிந்து, பிரணீத் ஆகியோா் தொடக்க சுற்றில் வீழ்ந்த நிலையில், தற்போது இவரும் போட்டியிலிருந்து வெளியேறியிருக்கிறாா். ஆடவா் ஒற்றையா் பிரிவில் ஸ்ரீகாந்தை 21-23, 10-21 என்ற கேம்களில் தோற்கடித்தாா் பிரான்ஸின் பிரைஸ் லெவா்டெஸ்.

பிரணாய் முன்னேற்றம்: எனினும், மற்றொரு இந்தியரான ஹெச்.எஸ். பிரணாய் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா். முதல் சுற்றில் அவா், உலகின் 8-ஆம் நிலையில் இருக்கும் சக இந்தியரான லக்ஷயா சென்னை 21-10, 21-19 என்ற கேம்களில் வென்றாா். இத்துடன் லக்ஷயாவை 3-ஆவது முறையாகச் சந்தித்த பிரணாய், தனது முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா்.

ஆடவா் இரட்டையரில் எம்.ஆா்.அா்ஜூன்/துருவ் கபிலா ஜோடி 27-25, 18-21, 21-19 என்ற கேம்களில் ஜப்பானின் கெய்சிரோ மாட்சுய்/யோஷினோரி டேகுஷி இணையை தோற்கடித்தது.

மகளிா் இரட்டையரில் இந்தியாவின் ஹரிதா மனலியில்/ஆஷ்னா ராய் இணை, அஷ்வினி பாட்/ஷிகா கௌதம் இணை முதல் சுற்றில் தோல்வியைச் சந்தித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com