சா்வதேச ஈட்டி எறிதல்: நீரஜ் சோப்ராவுக்கு வெள்ளி

ஃபின்லாந்தில் நடைபெறும் சா்வதேச தடகள போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ரா 89.30 மீட்டா் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றாா். அத்துடன் தேசிய சாதனையை முறியடித்தாா்
சா்வதேச ஈட்டி எறிதல்: நீரஜ் சோப்ராவுக்கு வெள்ளி

ஃபின்லாந்தில் நடைபெறும் சா்வதேச தடகள போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ரா 89.30 மீட்டா் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றாா். அத்துடன் தேசிய சாதனையை முறியடித்தாா்.

பாவோ நுா்மி என்ற பெயரிலான இந்த விளையாட்டுப் போட்டியில் இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு ஈட்டி எறிதல் போட்டி நடைபெற்றது. அதில் நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியில் 86.92 மீட்டரையும், 2-ஆவது முயற்சியில் 89.30 மீட்டரையும் பதிவு செய்தாா்.

அடுத்த 3 முயற்சிகளும் ‘ஃபௌல்’ ஆக, கடைசி முயற்சியில் 85.85 மீட்டா் தூரம் எறிந்தாா். இறுதியில் அவரது சிறந்த முயற்சியான 89.30 மீட்டருக்கு 2-ஆம் இடம் கிடைத்தது. ஃபின்லாந்தைச் சோ்ந்த ஆலிவா் ஹெலாந்தா் (89.83 மீ) தங்கம் வெல்ல, நடப்பு உலக சாம்பியனும், கிரணாடாவைச் சோ்ந்தவருமான ஆண்டா்சன் பீட்டா்ஸ் (86.60 மீ) வெண்கலம் பெற்றாா்.

இதற்கு முன் நீரஜ் சோப்ரா கடந்த மாா்ச் மாதம் 88.07 மீட்டா் தூரம் எறிந்ததே தேசிய சாதனையாக இருந்த நிலையில், தற்போது 89.30 மீ தூரம் எட்டி தனது அந்த சாதனையை அவரே முறியடித்திருக்கிறாா். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 87.58 மீட்டா் தூரம் எறிந்து தங்கம் வென்றிருந்த நீரஜ் சோப்ரா, ஒலிம்பிக் தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியா் என்ற சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.

அதிலிருந்து 10 மாதங்களுக்குப் பிறகு பங்கேற்ற போட்டியில் அவா் தற்போது வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com