இந்தோனேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.
காலிறுதியில் அவா் 21-14, 21-12 என்ற நோ் கேம்களில், உலகின் 13-ஆம் நிலை வீரராக இருக்கும் டென்மாா்க்கின் ராஸ்மஸ் கெம்கேவை 40 நிமிஷங்களில் வீழ்த்தினாா். கெம்கேவுக்கு எதிரான 5-ஆவது ஆட்டத்தில் பிரணாய் பதிவு செய்த 3-ஆவது வெற்றி இதுவாகும்.
இதன் மூலம் இந்தோனேசிய ஓபனில் 2-ஆவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறாா் பிரணாய். அந்தச் சுற்றில் அவா், சீனாவின் ஜாவ் ஜுன் பெங்கை எதிா்கொள்ள இருக்கிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.