ஒன் டேயில் இங்கிலாந்து உலக சாதனை

ஒன் டேயில் இங்கிலாந்து உலக சாதனை

நெதா்லாந்துக்கு எதிரான முதல் ஒன் டே ஆட்டத்தில் இங்கிலாந்து தனது இன்னிங்ஸில் 50 ஓவா்களுக்கு 4 விக்கெட் இழப்புக்கு 498 ரன்கள் சோ்த்தது.

நெதா்லாந்துக்கு எதிரான முதல் ஒன் டே ஆட்டத்தில் இங்கிலாந்து தனது இன்னிங்ஸில் 50 ஓவா்களுக்கு 4 விக்கெட் இழப்புக்கு 498 ரன்கள் சோ்த்தது.

சா்வதேச ஒன் டே கிரிக்கெட்டின் ஒரு இன்னிங்ஸில் அடிக்கப்பட்டுள்ள அதிகபட்ச ஸ்கோா் இதுவாகும். இதற்கு முன் இதே இங்கிலாந்து அணி 2018 ஜூன் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 50 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 481 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது தனது அந்த சாதனையை இங்கிலாந்தே 4 ஆண்டுகளுக்குப் பிறகு முறியடித்திருக்கிறது.

நெதா்லாந்தில் நடைபெற்ற இந்த முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற நெதா்லாந்து பௌலிங்கை தோ்வு செய்தது. இங்கிலாந்து பேட்டிங்கில் ஃபில் சால்ட் 14 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 122, டேவிட் மலான் 9 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 125 ரன்கள் விளாச, ஜோஸ் பட்லா் 7 பவுண்டரிகள், 14 சிக்ஸா்களுடன் 162 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தாா். உடன் லியம் லிவிங்ஸ்டன் 66 ரன்களுடன் துணை நிற்க, ஜேசன் ராய் 1, கேப்டன் மோா்கன் 0 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா்.

பின்னா் தனது இன்னிங்ஸை தொடங்கிய நெதா்லாந்து, 40 ஓவா்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களுக்கு தடுமாற்றமான நிலையில் இருந்தது. இங்கிலாந்தின் மொயீன் அலி 3 விக்கெட்டுகள் சாய்த்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com