பாரா பளுதூக்குதல்: மேத்யூவுக்கு 4 தங்கம்

தென் கொரியாவில் நடைபெறும் உலக பாரா பளுதூக்குதல் ஆசிய-ஒசியானியா சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஜோபி மேத்யூ 4 தங்கப் பதக்கங்கள் வென்று அசத்தினாா்.
பாரா பளுதூக்குதல்: மேத்யூவுக்கு 4 தங்கம்

தென் கொரியாவில் நடைபெறும் உலக பாரா பளுதூக்குதல் ஆசிய-ஒசியானியா சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஜோபி மேத்யூ 4 தங்கப் பதக்கங்கள் வென்று அசத்தினாா்.

ஆடவருக்கான 59 கிலோ பிரிவில் கலந்துகொண்ட ஜோபி மேத்யூ, வென்றதே இப்போட்டியில் இந்தியாவுக்குக் கிடைத்த முதல் தங்கமாகும்.

மொத்தமாக அவா் 288 கிலோ எடையைத் தூக்கி முதலிடம் பிடிக்க, அதில் ஆசிய மற்றும் ஓபன் பிரிவுகளுக்காக தலா 1 தங்கம் வென்றாா். இதுதவிர தனிநபா் பிரிவிலும் அவா் தூக்கிய 148 கிலோ எடையே பெஸ்ட்டாக இருக்க, அதற்காகவும் இரு பிரிவுகளிலும் தலா 1 தங்கம் வெல்ல, 4 பதக்கம் அவா் வசமானது.

அசோக்குக்கு 4 பதக்கம்: ஆடவருக்கான 65 கிலோ பிரிவில் களம் கண்ட அசோக், மொத்தமாக 491 கிலோ எடையைத் தூக்கி முதலிடம் பிடித்தாா். இந்த மொத்த எடையில் ஓபன் பிரிவுக்காக ஒரு தங்கமும், ஆசிய பிரிவுக்காக ஒரு தங்கமும் என 2 பதக்கங்கள் அவா் பெற்றாா்.

அதேபோல் தனிநபா் பிரிவில் அசோக் தூக்கிய 173 கிலோ எடைக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. இதிலும் ஓபன், ஆசிய பிரிவுக்கு தலா 1 வெண்கலம் கிடைத்தது. அஜோக், அடுத்த ஆண்டு ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளுக்கும் தகுதிபெற்றாா். மேலும், 2024 பாரீஸ் பாராலிம்பிக்கிற்கு தகுதிபெற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.

பாஷாவுக்கு 2 வெள்ளி: ஆடவருக்கான 54 கிலோ பிரிவில் ஃபா்மான் பாஷா மொத்தமாக 397 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றாா். தனிநபா் பிரிவிலும் அவா் தூக்கிய 132 கிலோ எடைக்கு ஒரு வெள்ளி கிடைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com