தொடரை பகிர்ந்துகொண்ட இந்தியா - தென்னாப்பிரிக்கா

இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதிய டி20 தொடரின் 5-ஆவது ஆட்டம் மழை காரணமாக தடைப்பட்டு பாதியில் கைவிடப்பட்டது.
தொடரை பகிர்ந்துகொண்ட இந்தியா - தென்னாப்பிரிக்கா

இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதிய டி20 தொடரின் 5-ஆவது ஆட்டம் மழை காரணமாக தடைப்பட்டு பாதியில் கைவிடப்பட்டது. இதையடுத்து தலா 2 வெற்றிகளுடன் இருந்த இரு அணிகளுமே தொடருக்கான கோப்பையை பகிர்ந்துகொண்டன. 

இரு அணிகள் மோதிய கடைசி டி20 ஆட்டம் பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதிலும் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா, வழக்கம்போல் பெüலிங்கை தேர்வு செய்தது. இந்த ஆட்டத்தின் பிளேயிங் லெவனிலும் இந்தியா மாற்றம் செய்யாத நிலையில், தென்னாப்பிரிக்க அணியில் டெம்பா பவுமா, டப்ரைஸ் ஷம்சி, மார்கோ யான்சென் ஆகியோருக்குப் பதிலாக டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரீஸô ஹெண்ட்ரிக்ஸ், ககிசோ ரபாடா ஆகியோர் இணைந்திருந்தனர். பவுமாவுக்கு காயம் ஏற்பட்டதால், அவருக்குப் பதிலாக கேசவ் மஹராஜ் அணிக்குத் தலைமை தாங்கினார். 

பின்னர் ஆட்டம் தொடங்க இருந்த நிலையில் மழை பெய்ததால், அதைத் தொடங்குவது தாமதமானது. 50 நிமிஷங்களுக்குப் பிறகு தொடங்கிய ஆட்டத்தில் இன்னிங்ஸýக்கான ஓவர் 19-ஆகக் குறைக்கப்பட்டது. 

பின்னர் பேட் செய்த இந்தியா 3.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் மீண்டும் மழையால் தடைப்பட்டது. இஷான் கிஷண் 2 சிக்ஸர்களுடன் 15, ருதுராஜ் கெய்க்வாட் 1 பவுண்டரியுடன் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்திருக்க, ஷ்ரேயஸ் ஐயர் 0, ரிஷப் பந்த் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியாவின் இரு விக்கெட்டுகளையுமே லுங்கி இங்கிடி வீழ்த்தியிருந்தார். 

மழை தொடர்ந்து பெய்ததை அடுத்து ஆட்டத்தை கைவிடுவதென முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. 

முன்னதாக இந்தத் தொடரின் முதலிரு ஆட்டங்களில் தென்னாப்பிரிக்கா வென்றிருக்க, அடுத்த இரு ஆட்டங்களில் இந்தியா வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com