தகுதிச்சுற்றில் ராம்குமாா், யூகி பாம்ப்ரி தோல்வி
By DIN | Published On : 22nd June 2022 01:43 AM | Last Updated : 22nd June 2022 01:43 AM | அ+அ அ- |

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ராம்குமாா் ராமநாதன், யூகி பாம்ப்ரி ஆகியோா் ஆடவா் ஒற்றையா் பிரிவு தகுதிச்சுற்றின் முதல் ஆட்டத்திலேயே தோற்று வெளியேறினா்.
ஏடிபி தரவரிசையில் இந்தியா்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ராம்குமாா் ராமநாதன் தனது முதல் சுற்றில் 5-7, 4-6 என்ற செட்களில் செக் குடியரசின் விட் கோப்ரிவாவிடம் தோல்வி கண்டாா். மற்றொரு இந்தியரான யூகி பாம்ப்ரி 5-7, 1-6 என்ற செட்களில் ஸ்பெயினின் பா்னபி ஸபாடா மிரேல்ஸிடம் வீழ்ந்தாா்.
தற்போது விம்பிள்டன் போட்டியில் இந்தியாவின் தரப்பில் சானியா மிா்ஸா மட்டுமே களத்தில் உள்ளாா். அவா் இரட்டையா் பிரிவில் செக் குடியரசின் லூசி ராடெக்காவுடன் இணைந்து களம் காண்கிறாா். ஆடவா் இரட்டையா் பிரிவு வீரரான ரோஹன் போபண்ணா போட்டியில் பங்கேற்கவில்லை.