முதல் டி20: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு
By DIN | Published On : 26th June 2022 09:03 PM | Last Updated : 26th June 2022 09:03 PM | அ+அ அ- |

அயா்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இந்தியா - அயா்லாந்து அணிகள் மோதும் முதல் டி20 ஆட்டம் டப்ளினில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹாா்திக் பாண்டியா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். முதல் ஆட்டத்தில் தமிழக வீரர் தினேஷ் காா்த்திக் இடம் பெற்றுள்ளார்.
மழை காரணமாக ஆட்டம் சற்று தாமதமாக தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் பங்கேற்பதற்காக இந்தியாவின் பிரதான அணி அந்நாட்டுக்குச் சென்றிருப்பதால், இளம் வீரா்கள் அடங்கிய 2-ஆம் நிலை அணி இந்தத் தொடருக்காக களமிறிங்க உள்ளது.