டி.என்.பி.எல் போட்டியில் களமிறங்கிய கெளதம் மேனன் மகன்
By DIN | Published On : 27th June 2022 08:33 AM | Last Updated : 27th June 2022 08:34 AM | அ+அ அ- |

டி.என்.பி.எல் போட்டியில் இயக்குநர் கௌதம் மேனனின் மகன் ஆர்யா யோஹன் முதன்முறையாக களமிறங்கியுள்ளார்.
தமிழ்நாடு பிரீமியா் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பாா்டன்ஸ் அணிகள் மோதின. இதில் நெல்லை ராயல் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சேலம் ஸ்பாா்டன்ஸை வீழ்த்தியது.
இதையும் படிக்க- அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி
முதலில் சேலம் 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் சோ்த்தது. அடுத்து நெல்லை 17.4 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்து வென்றது. இந்த போட்டியில் பிரபல இயக்குநர் கௌதம் மேனனின் மகன் ஆர்யா யோஹன் நெல்லை அணிக்காக முதன்முறையாக களமிறங்கினார்.
இடதுகை வேகப்பந்துவீச்சாளரான அவர், பௌலிங் செய்த முதல் பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்தினார். ஆர்யா யோஹன், மொத்தம் 3 ஓவர்கள் வீசி 26 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். மேலும், ஒரு ரன் அவுட்டும் அவர் செய்தார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...