பணம் முக்கியமல்ல, சிஎஸ்கேவுக்கு விளையாட வேண்டும்: ராபின் உத்தப்பா

ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி தன்னை மீண்டும் தேர்வு செய்யவேண்டும் எனப் பிரார்த்தனை செய்ததாகப் பிரபல வீரர் ராபின் உத்தப்பா கூறியுள்ளார்.
பணம் முக்கியமல்ல, சிஎஸ்கேவுக்கு விளையாட வேண்டும்: ராபின் உத்தப்பா
Published on
Updated on
1 min read

ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி தன்னை மீண்டும் தேர்வு செய்யவேண்டும் எனப் பிரார்த்தனை செய்ததாகப் பிரபல வீரர் ராபின் உத்தப்பா கூறியுள்ளார்.

ராபின் உத்தப்பாவை ஐபிஎல் ஏலத்தில் ரூ. 2 கோடிக்குத் தேர்வு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்நிலையில் சிஎஸ்கே யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் ராபின் உத்தப்பா கூறியதாவது:

ஏலத்தில் மீண்டும் பல வீரர்களை சிஎஸ்கே அணி தேர்வு செய்துள்ளது. அதேசமயம் டு பிளெஸ்சிஸ், ஷர்துல் தாக்குர், சுரேஷ் ரெய்னா போன்றோர் அணியில் இல்லாதது வேதனையளிக்கிறது. சிஎஸ்கே அணியில் நான் இல்லாதபோது, அந்த அணி நிர்வாகம் வீரர்களைக் கவனித்துக்கொள்ளும் விதம் பற்றி கேள்விப்பட்டுள்ளேன். அதை நானும் என் குடும்பத்தினரும் அனுபவித்தபோது மிகவும் ஆச்சர்யப்பட்டோம். சிஎஸ்கே அணியை மிகவும் விரும்ப ஆரம்பித்தேன். இதனால் பணம் ஒரு விஷயம் அல்ல, மீண்டும் சிஎஸ்கே அணிக்குத் தேர்வாக வேண்டும் எனப் பிரார்த்தனை செய்தேன். நினைத்தபடியே நான் சிஎஸ்கே அணிக்கு மீண்டும் திரும்பிவிட்டேன். நான் ஏலம் நடந்தபோது அதைப் பார்க்கவில்லை. பயிற்சியை முடித்துவிட்டு மனைவியிடம் கேட்டேன். அவர்தான் நான் சிஎஸ்கேவுக்குத் தேர்வானதைக் கூறினார் என்றார். 

36 வயது உத்தப்பா, கடந்த வருடம் சிஎஸ்கே அணிக்காக 4 ஆட்டங்களில் விளையாடி 115 ரன்கள் எடுத்தார். தில்லிக்கு எதிரான ஃபிளேஆஃப் ஆட்டத்தில் 44 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். இறுதிச்சுற்றில் 15 பந்துகளில் 3 சிக்ஸர்கள் உள்பட 31 ரன்கள் எடுத்து சென்னை அணி ஐபிஎல் கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக அமைந்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com