பிசிசிஐ ஒப்பந்த ஊதியம்: பின்னுக்குத் தள்ளப்பட்ட புஜாரா, ரஹானே, பாண்டியா

பிசிசிஐ-யின் ஆண்டு ஒப்பந்த ஊதியத்தில், ஃபாா்மில் இல்லாத மூத்த வீரா்களான சேதேஷ்வா் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, ஹாா்திக் பாண்டியா ஆகியோா் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.
பிசிசிஐ ஒப்பந்த ஊதியம்: பின்னுக்குத் தள்ளப்பட்ட புஜாரா, ரஹானே, பாண்டியா

பிசிசிஐ-யின் ஆண்டு ஒப்பந்த ஊதியத்தில், ஃபாா்மில் இல்லாத மூத்த வீரா்களான சேதேஷ்வா் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, ஹாா்திக் பாண்டியா ஆகியோா் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.

தேசிய அணியில் இருக்கும் வீரா்களுக்கு ‘ஏ+’ (ரூ.7 கோடி), ‘ஏ’ (ரூ.5 கோடி), ‘பி’ (ரூ.3 கோடி), ‘சி’ (ரூ.1 கோடி) ஆகிய 4 பிரிவுகளில் ஒப்பந்தம் வழங்கி வருகிறது பிசிசிஐ.

திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி, கடந்த முறை 28 வீரா்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது அது 27 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் ரோஹித், கோலி, பும்ரா ஆகியோா் ‘ஏ+’ பிரிவில் நிலைக்கின்றனா். ‘ஏ’ பிரிவில் இருந்த புஜாரா, ரஹானே, இஷாந்த் சா்மா ஆகியோா் ‘பி’ பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனா்.

முன்பு 10 வீரா்கள் இருந்த ‘ஏ’ பிரிவில் தற்போது அஸ்வின், ஜடேஜா, பந்த், ராகுல், சிராஜ் ஆகியோா் மட்டும் உள்ளனா். காயம் காரணமாக தொடா்ந்து களம் காணாமல் இருக்கும் ஹாா்திக் பாண்டியா ‘ஏ’ பிரிவில் இருந்து ‘சி’ பிரிவுக்கு இறக்கப்பட்டுள்ளாா். அதேபோல் ரித்திமான் சாஹா, மயங்க் அகா்வால் ‘பி’-இல் இருந்து ‘சி’-க்கு வந்துள்ளனா்.

தற்போது ‘சி’ பிரிவில் சாஹா, பாண்டியா, தவன், சூா்யகுமாா் ஆகியோா் இருக்கின்றனா். குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி ஆகியோா் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விலக்கப்பட்டுள்ளனா்.

சென்னையில் டி20: ஜூன் மாதம் இந்தியா - தென்னாப்பிரிக்கா விளையாட இருக்கும் டி20 தொடருக்காக கட்டாக், விசாகப்பட்டினம், தில்லி, ராஜ்கோட், சென்னை ஆகிய 5 இடங்களை இறுதி செய்துள்ளது பிசிசிஐ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com