இன்றுமுதல் மகளிர் உலகக் கோப்பை

மெளன்ட் மெளன்கனுய், மார்ச் 3: ஐசிசியின் மகளிர் ஒன் டே கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி நியூஸிலாந்தில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. 


மெளன்ட் மெளன்கனுய், மார்ச் 3: ஐசிசியின் மகளிர் ஒன் டே கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி நியூஸிலாந்தில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. 

முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் மோதுகின்றன. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 6-ஆம் தேதி பாகிஸ்தானை சந்திக்கிறது. பின்னர் நியூஸிலாந்தை 10-ஆம் தேதியும், மேற்கிந்தியத் தீவுகளை 12-ஆம் தேதியும், இங்கிலாந்தை 16-ஆம் தேதியும் எதிர்கொள்கிறது. அடுத்து ஆஸ்திரேலியாவுடன் 19-ஆம் தேதியும், வங்கதேசத்துடன் 22-ஆம் தேதியும், தென்னாப்பிரிக்காவுடன் 27-ஆம் தேதியும் விளையாடுகிறது. 

கரோனா சூழல் காரணமாக ஓராண்டு தாமதமாக நடைபெறும் இப்போட்டியின் ஆட்டங்கள், நியூஸிலாந்தின் 6 நகரங்களில் நடைபெறவுள்ளன. 8 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், மற்றொரு அணியுடன் தலா ஒரு முறை மோதும். லீக் ஆட்டங்கள் முடிவில் இரு பிரிவுகளிலும் முதலிரு இடங்களில் இருக்கும் அணிகள் அரையிறுதி ஆட்டங்களுக்கு தகுதிபெறும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com