வார்னேவின் மறைவு தனிப்பட்ட முறையில் இழப்பு: டிராவிட்

ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னேவின் மறைவு தனிப்பட்ட முறையில் இழப்பு என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
வார்னேவின் மறைவு தனிப்பட்ட முறையில் இழப்பு: டிராவிட்
Published on
Updated on
1 min read


ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னேவின் மறைவு தனிப்பட்ட முறையில் இழப்பு என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

ஷேன் வார்னே தாய்லாந்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலமானார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது. அவரது மறைவுக்கு ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியா, இலங்கை டெஸ்ட் ஆட்டத்தின்போது ராகுல் டிராவிட் தனது இரங்கலைத் தெரிவித்தார். அதன் விடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இதையும் படிக்கஷேன் வார்னே: ஜெயித்த கதை

டிராவிட் தெரிவித்ததாவது:

"ஷேன் வார்னேவுக்கு எதிராக விளையாடிய பெருமையும், கௌரவமும் எனக்கு உள்ளது. அவரைத் தனிப்பட்ட முறையில் தெரிந்துகொண்டதும், அவருடன் இணைந்து விளையாடியதும் சக வீரராக இருந்ததும் கூடுதல் பெருமைக்குரியது. என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாக இது இருக்கும்.

அவரை அடிக்கடி பார்க்காவிட்டாலும்கூட, இது தனிப்பட்ட முறையில் ஒரு இழப்பு. உண்மையில் இது வேதனையளிக்கிறது. கிரிக்கெட் விளையாடும் வரை ஷேன் வார்னேவும், ரோட்னி மார்ஷும் நினைவிலிருப்பார்கள்."

1992-இல் அறிமுகமான ஷேன் வார்னே ஆஸ்திரேலியாவுக்காக 145 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடி 708 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 194 ஆட்டங்களில் விளையாடி 293 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com