இந்தியா இன்னிங்ஸ் வெற்றி: மூன்றே நாள்களில் முடிந்தது மொஹாலி டெஸ்ட்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலாக வென்றது. இதையடுத்து 2 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முன்னிலை பெற்றது இந்தியா. 
இந்தியா இன்னிங்ஸ் வெற்றி: மூன்றே நாள்களில் முடிந்தது மொஹாலி டெஸ்ட்
இந்தியா இன்னிங்ஸ் வெற்றி: மூன்றே நாள்களில் முடிந்தது மொஹாலி டெஸ்ட்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலாக வென்றது. இதையடுத்து 2 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முன்னிலை பெற்றது இந்தியா. 

இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் அட்டகாசமாக பேட்டிங் செய்த ரவீந்திர ஜடேஜா, இரு இன்னிங்ஸ்களின் பெüலிங்கிலும் அசத்தினார். அவருக்குத் துணையாக சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினும் விக்கெட்டுகள் சரிக்க, "ஃபாலோ ஆன்' பெற்ற இலங்கையின் ஆட்டத்தை இருவரும் முடிவுக்குக் கொண்டு வந்தனர். ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் ஆனார். 
முதல் இன்னிங்ஸில் ஜடேஜா ஒருவரின் ஸ்கோரை விட ஒரு ரன் குறைவாக எடுத்த இலங்கை, 2 ஆவது இன்னிங்ஸில் அதைவிட 3 ரன்களே அதிகம் அடித்தது. அத்துடன், ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 16 விக்கெட்டுகளையும் இழந்தது. 

முன்னதாக, வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 129.2 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 574 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்திருந்தது. ரவீந்திர ஜடேஜா 17 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 175 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். பின்னர் தனது இன்னிங்ûஸ தொடங்கிய இலங்கை, சனிக்கிழமை முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் அடித்திருந்தது. 

பின்னர் பாதும் நிசங்கா சரித் அசலங்கா கூட்டணி ஞாயிற்றுக்கிழமை அணியின் இன்னிங்ûஸ தொடர்ந்தது. 
இதில் அசலங்கா 29 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த விக்கெட்டுகள் அதே வேகத்தில் வெளியேறின. சுரங்கா லக்மல், லசித் எம்புல்தெனியா, விஷ்வா ஃபெர்னாண்டோ, லாஹிரு குமாரா ஆகியோர் டக் அவுட்டாகினர். 61 மற்றும் 65 ஆவது ஓவர்களில் தலா 2 விக்கெட்டுகள் சரித்தார் ஜடேஜா. இன்னிங்ஸ் முடிவில் பாதும் நிசங்கா 11 பவுண்டரிகளுடன் 61 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தார். 

இந்திய பெüலிங்கில் ஜடேஜா 5, ஜஸ்பிரீத் பும்ரா, அஸ்வின் ஆகியோர் தலா 2, முகமது ஷமி 1 விக்கெட் எடுத்தனர். முதல் இன்னிங்ஸிலேயே 400 ரன்கள் பின்தங்கிய இலங்கை "ஃபாலோ ஆன்' பெற்றது. 

2}ஆவது இன்னிங்ஸிலும் இலங்கை பேட்டர்கள் சோபிக்காமல் ஆட்டமிழந்தனர். லாஹிரு திரிமனே டக் அவுட்டாக, கேப்டன் திமுத் கருணாரத்னே 27, பாதும் நிசங்கா 6, ஏஞ்ஜெலோ மேத்யூஸ் 28, தனஞ்ஜெய டி சில்வா 30, சரித் அசலங்கா 20, லசித் எம்புல்தெனியா 2, லாஹிரு குமாரா 4 ரன்களுக்கு பெவிலியனுக்கு அனுப்பப்பட, சுரங்கா லக்மல், விஷ்வா ஃபெர்னாண்டோ டக் அவுட்டாகினர்.

நிரோஷன் டிக்வெல்லா 9 பவுண்டரிகள் உள்பட 51 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய தரப்பில் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 4, முகமது ஷமி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com