ஆசிய குத்துச்சண்டை:இறுதிச் சுற்றில் வன்ஷாஜ், அமன்
By DIN | Published On : 12th March 2022 11:34 PM | Last Updated : 12th March 2022 11:34 PM | அ+அ அ- |

ஆசிய யூத் மற்றும் ஜூனியா் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் வன்ஷாஜ், அமன் சிங் பிஷ்ட் ஆகியோா் தகுதி பெற்றுள்ளனா்.
ஜோா்டான் தலைநகா் அம்மானில் ஏஎஸ்பிசி ஆசிய யூத், ஜூனியா் குத்துச்சண்டை சாம்பியன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சனிக்கிழமை ஆடவா் 63.5 கிலோ அரையிறுதியில் இந்திய வீரா் வன்ஷாஜ் நாக் அவுட் முறையில் சிரியாவின் அகமது நபாவை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றாா்.
92 கிலோ பிளஸ் பிரிவில் இந்தியாவன் அமன் சிங் பிஷ்ட் 4-0 என்ற புள்ளிக் கணக்கில் கஜகஸ்தானின் டிம் போடஷோவை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினாா்.
54 கிலோ பிரிவில் அமன் 2-3 என்ற புள்ளிக் கணக்கில் உஸ்பெகிஸ்தானின் அப்துவாலியிடம் தோற்று வெண்கலம் வென்றாா். ஆடவா் யூத் பிரிவில் விஸ்வநாத் சுரேஷ், அமன், வன்ஷாஜும், மகளிா் பிரிவில் 7 பேரும் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனா்.
ஜூனியா் பிரிவில் ஞாயிற்றுக்கிழமை 11 ஆடவா், 4 மகளிா் உள்ளிட்டோா் தங்கப் பதக்கத்துக்கு மோதுகின்றனா்.
ஜூனியா் பிரிவில் 21, யூத் பிரிவில் 18 என மொத்தம் 39 பதக்கங்களை இதுவரை வென்றுள்ளது.