சிஎஸ்கேவின் புதிய விடியோ: என்ன சொல்கிறார் ஜடேஜா?
By DIN | Published On : 17th March 2022 08:02 PM | Last Updated : 17th March 2022 08:02 PM | அ+அ அ- |

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கிறிஸ் ஜோர்டன், ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ ஆகியோர் இணைந்தது பற்றிய அறிவிப்பை அணி நிர்வாகம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் 2022 நெருங்கி வரும் நிலையில் அனைத்து அணிகளும் சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாக இயங்கி வருகின்றன. சர்வதேச அணிகளிலிருந்து ஐபிஎல் அணியுடன் இணையும் வீரர்கள், பயிற்சியாளர்கள் குறித்த அறிவிப்புகள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸும் இதுபோன்ற அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் ருதுராஜ் கெய்க்வாட் அணியுடன் இணையும் விடியோவை வெளியிட்டிருந்தது.
இதையும் படிக்க | தற்போதைய கோலி எதிரணிக்கு அபாயகரமானவர்: மேக்ஸ்வெல் எச்சரிக்கை
தற்போது 'ஜேஜேஜே' என 3 அப்டேட்களை அறிவித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம். ஐபிஎல் ஏலத்தில் தேர்வான கிறிஸ் ஜோர்டன், அணியுடன் இணைந்துள்ள புகைப்படம் ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. டுவைன் பிராவோவும், தான் திரும்பிவிட்டதாகக் கூறிய செய்தியை சிஎஸ்கே நிர்வாகம் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளது.
இவற்றுக்கிடையே, விசில் அடித்து 'விசில் போடு' என்று ரவீந்திர ஜடேஜா கூறும் விடியோவும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவை ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
ouR J has something to say! (2/3)#JadduSollaiThattadhey #WhistlePodu pic.twitter.com/C7llZU3Opx
— Chennai Super Kings (@ChennaiIPL) March 17, 2022