19 வயது நசீம் ஷா அபார பந்துவீச்சு: முதல் இன்னிங்ஸில் நல்ல ஸ்கோரை குவித்த ஆஸி. அணி

பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 391 ரன்களை எடுத்துள்ளது.
நசீம் ஷா
நசீம் ஷா

பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 391 ரன்களை எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட், லாகூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தது. முதல் நாள் இறுதியில் ஆஸி. அணி 88 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்தது. கிரீன் 20, கேரி 8 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். கவாஜா 91, ஸ்மித் 59 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள். 

2-ம் நாளான இன்று கிரீனும் கேரியும் சிறப்பாக விளையாடி 6-வது விக்கெட்டுக்கு 234 பந்துகளில் 135 ரன்கள் எடுத்தார்கள். பாகிஸ்தானில் 6-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் எடுத்த ஆஸி. கூட்டணி என்கிற பெருமையை இருவரும் பெற்றார்கள். கிரீன் 79 ரன்களும் கேரி 67 ரன்களும் எடுத்தார்கள். இறுதியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 133.3 ஓவர்கள் விளையாடி 391 ரன்கள் எடுத்தது. ஷஹீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா தலா 54 விக்கெடுட்களை எடுத்தார்கள்.  31 ஓவர்கள் வீசி 58 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்த 19 வயது நசீம் ஷாவின் பந்துவீச்சு பாராட்டுகளைப் பெற்றுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com