வரலாறு படைத்தது வங்கதேசம்: தெ.ஆ. மண்ணில் முதல் ஒருநாள் தொடர் வெற்றி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் வங்கதேச அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வரலாறு படைத்தது வங்கதேசம்: தெ.ஆ. மண்ணில் முதல் ஒருநாள் தொடர் வெற்றி


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் வங்கதேச அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் இடையிலான 3-வது ஒருநாள் ஆட்டம் செஞ்சூரியனில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர் ஜேன்மன் மலான் மட்டும் அதிகபட்சமாக 39 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சோபிக்கத் தவறியதால், அந்த அணி 37 ஓவர்களில் 154 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

வங்கதேசத்தில் டஸ்கின் அகமது 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேசத்துக்கு கேப்டன் தமிம் இக்பால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப் பாதைக்கு வழிநடத்தினார். லிட்டன் தாஸ் ஒத்துழைப்பு தந்து 48 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அரைசதம் கடந்த இக்பால் இறுதிவரை ஆட்டமிழக்காமல் வங்கதேச வெற்றியை உறுதி செய்தார். 26.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்த வங்கதேசம் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தமிம் இக்பால் 82 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தார்.

இதன்மூலம், 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை வங்கதேச அணி 1-0 என்ற கணக்கில் வென்றது. தென் ஆப்பிரிக்க மண்ணில் வங்கதேசம் வெல்லும் முதல் ஒருநாள் தொடர் இது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com