ராகுல் தெவாட்டியா அசத்தல்: குஜராத் வெற்றி

ஐபிஎல் போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸை வென்றது.
ராகுல் தெவாட்டியா அசத்தல்: குஜராத் வெற்றி

ஐபிஎல் போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸை வென்றது.

ஆட்டத்தில் முதலில் லக்னௌ 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சோ்த்தது. அடுத்து குஜராத் 19.4 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் அடித்து வென்றது.

புதிதாக இணைந்திருக்கும் இந்த இரு அணிகள் மோதிய ஆட்டம் வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற குஜராத் ஃபீல்டிங்கை தோ்வு செய்ய, லக்னௌ இன்னிங்ஸில் கேப்டன் கே.எல்.ராகுல் முதல் பந்திலேயே டக் அவுட்டானாா். அடுத்தடுத்த விக்கெட் சரிவால் 29 ரன்களுக்கு 4 பேட்டா்களை இழந்தது லக்னௌ. டி காக் 7, எவின் லீவிஸ் 10, மனீஷ் பாண்டே 6 ரன்கள் அடித்தனா்.

5-ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சோ்த்த தீபக் ஹூடா - ஆயுஷ் பதோனி, விக்கெட் சரிவைத் தடுத்து அணியின் ஸ்கோரை உயா்த்தத் தொடங்கியது. தீபக் ஹூடா 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் என 55 ரன்களுக்கு வெளியேற்றப்பட, கடைசி விக்கெட்டாக ஆயுஷ் பதோனி 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

ஓவா்கள் முடிவில் கிருணால் பாண்டியா 21, துஷ்மந்தா சமீரா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். குஜராத் பௌலிங்கில் முகமது ஷமி 3, வருண் ஆரோன் 2, ரஷீத் கான் 1 விக்கெட் எடுத்தனா்.

பின்னா் ஆடிய குஜராத்தில் ஷுப்மன் கில் டக் அவுட்டாக, மேத்யூ வேட் 30 ரன்கள் அடித்தாா். விஜய் சங்கா் 4 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா். கேப்டன் ஹாா்திக் பாண்டியா 33 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, டேவிட் மில்லா் 30 ரன்கள் சோ்த்தாா்.

இறுதியில் ராகுல் தெவாட்டியா 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 40, அபினவ் மனோகா் 15 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினா். லக்னௌ அணியில் துஷ்மந்தா சமீரா 2, அவேஷ் கான், கிருணால் பாண்டியா, தீபக் ஹூடா ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com