மாட்ரிட் ஓபன்: பதோசா தோல்வி
By DIN | Published On : 02nd May 2022 06:14 AM | Last Updated : 02nd May 2022 06:14 AM | அ+அ அ- |

மாட்ரிட் ஓபன்: பதோசா தோல்வி
ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் 2-ஆம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் பெளலா பதோசா 2-ஆவது சுற்றில் தோல்வி கண்டார்.
அவரை 6-3, 6-1 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார் ருமேனியாவின் சைமோனா ஹேலப். இதன் மூலம், இப்போட்டியில் 2 முறை சாம்பியனான ஹேலப் தனது பழைய ஃபார்மை மீட்டெடுப்பதற்கான முயற்சியில் இருப்பது தெரிகிறது. அடுத்த சுற்றில் அவர், 14-ஆவது இடத்திலிருக்கும் அமெரிக்காவின் கோகோ கெüஃபை சந்திக்கிறார்.
இதர ஆட்டங்களில், 8-ஆம் இடத்திலிருக்கும் டுனீசியாவின் ஆன்ஸ் ஜாபியுர் 7-5, 0-6, 6-4 என்ற செட்களில் ரஷியாவின் வார்வரா கிராசேவாவையும், 11-ஆவது இடத்திலிருக்கும் ஸ்விட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிச் 6-3, 4-6, 7-5 என்ற செட்களில் செக் குடியரசின் கரோலினா முசோவாவையும் வென்றனர்.
போபண்ணா ஜோடி தோல்வி: இப்போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா/கனடாவின் டெனிஸ் ஷபோவெலாவ் இணை 7-6 (8/6), 3-6, 1-10 என்ற செட்களில் ஸ்பெயின் ஜோடியான பாப்லோ கரீனோ பஸ்டா/பாப்லோ மார்டினெஸிடம் தோல்வி கண்டது.