மாநில ஜிம்னாஸ்டிக்ஸ்: ஈரோடு முதலிடம்
By DIN | Published On : 02nd May 2022 12:57 AM | Last Updated : 02nd May 2022 06:16 AM | அ+அ அ- |

கோப்புப்படம்
சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான ஆா்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் சீனியா் பிரிவில் ஈரோடு முதலிடம் பிடித்தது.
வேளச்சேரியில் உள்ள எஸ்டிஏடி நீச்சல் வளாகத்தில் சனிக்கிழமை தொடங்கிய இப்போட்டி, ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. சப் ஜூனியா், ஜூனியா், சீனியா் மற்றும் வயது வாரியான பிரிவுகளில் இப்போட்டி நடைபெற்றது.
இதில் சீனியா் ஆடவா் பிரிவில் ஈரோட்டின் கோடீஸ்வரன் முதலிடமும், கோவையின் ரோகித் 2-ஆம் இடமும், மதுரையின் சந்தோஷ் ராஜா 3-ஆம் இடமும் பிடித்தனா். மகளிா் பிரிவில் சென்னையின் டிம்பிள் துவாகா்னி முதலிடமும், கேத்தலின் நிருபமா 2-ஆம் இடமும், ஈரோட்டின் ஸ்ரீமதி 3-ஆம் இடமும் பிடித்தனா்.
ஜூனியா் ஆடவா் பிரிவில் கோவையின் இஸ்ரவேல் ராஜ் முதலிடமும், தினேஷ் காா்த்திக் 2-ஆம் இடமும், ஈரோட்டின் ஸ்ரீநாத் 3-ஆம் இடமும் பெற்றனா். சப் ஜூனியா் ஆடவா் பிரிவில் ஈரோட்டின் ஜீவன், கவின், கோவையின் முகமது ஆஸிஃப் ஆகியோா் முறையே முதல் 3 இடங்கள் பெற்றனா். மகளிா் பிரிவில் காஞ்சிபுரத்தின் ஆரியானா ஒபெராய் முதலிடம், சென்னையின் ஒசியானா ரெனீ தாமஸ் 2-ஆம் இடம், காஞ்சிபுரத்தின் சமாரா சங்கா் 3-ஆம் இடம் பிடித்தனா்.