கொல்கத்தா ‘ஆல்-அவுட்’: லக்னெள அபார வெற்றி
By DIN | Published On : 07th May 2022 11:03 PM | Last Updated : 07th May 2022 11:03 PM | அ+அ அ- |

படம்: டிவிட்டர்/ஐபிஎல்
லக்னெள அணிக்கு எதிரான ஆட்டத்தில் 101 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளயும் கொல்கத்தா இழந்து தோல்வி அடைந்தது.
ஐபிஎல் தொடரின் 53ஆவது லீக் ஆட்டத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை லக்னெள அணி குவித்தது. அதிகபட்சமாக டி காக் 50 ரன்கள், தீபக் ஹூடா 41 ரன்கள் எடுத்தனர்.
தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணி 15வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
லக்னெள அணியின் அவேஷ் கான், ஜேசன் ஹோல்டர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் மீண்டும் புள்ளிப்பட்டியலின் முதலாவது இடத்திற்கு லக்னெள முன்னேறியது.