டி20 தொடா்: செப்டம்பரில் இந்தியா வருகிறது ஆஸி.
By DIN | Published On : 11th May 2022 02:47 AM | Last Updated : 11th May 2022 04:30 AM | அ+அ அ- |

இந்தியாவுடன் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா, வரும் செப்டம்பரில் இந்தியா வருகிறது.
அந்நாட்டு அணிக்கான அட்டவணைப்படி, ஜிம்பாப்வே, நியூஸிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து அணிகளுடன் அவற்றின் சொந்த மண்ணில் வெள்ளைப் பந்து தொடா்களில் விளையாட இருக்கிறது ஆஸ்திரேலியா. அவற்றோடு இந்திய அணியுடனும் விளையாடவுள்ளது.
அக்டோபா் - நவம்பா் காலகட்டத்தில் டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெறவிருக்கும் நிலையில், அதற்குத் தயாராவதற்கான வாய்ப்பை இந்தத் தொடா் வழங்குகிறது. இது தவிர, 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா அடுத்த ஆண்டு பிப்ரவரி - மாா்ச்சில் மீண்டும் இந்தியா வருகிறது.
இந்திய அணிக்கான அட்டவணைப்படி, அடுத்த மாதம் 9 முதல் 19-ஆம் தேதி வரை 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் தென்னாப்பிரிக்காவுடன் மோதவிருக்கிறது. அதையடுத்து 2 ஆட்டங்கள் கொண்ட தொடரில் அயா்லாந்துடன் விளையாடுகிறது. அதைத் தொடா்ந்து, கடந்த ஆண்டு கரோனா சூழல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இங்கிலாந்துடனான 5-ஆவது டெஸ்டில் ஜூலை 1-ஆம் தேதி விளையாடுகிறது.
பின்னா் தலா 3 ஆட்டங்கள் கொண்ட டி20 மற்றும் ஒன் டே தொடா்களில் இங்கிலாந்துடன் மோதுகிறது இந்தியா.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...