2019 ஐபிஎல் சூதாட்டம்: 7 போ் மீது சிபிஐ வழக்குப் பதிவு

2019 இந்தியன் பிரீமியா் லீக் (ஐபிஎல்) போட்டிகளின்போது பாகிஸ்தானிலிருந்து பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு சூதாட்டத்தில் ஈடுபட்டது தொடா்பான இரண்டு வழக்குகளில் 7 போ் போ் மீது சிபிஐ வழக்குப் பதி
கோப்புப்படம்
கோப்புப்படம்

2019 இந்தியன் பிரீமியா் லீக் (ஐபிஎல்) போட்டிகளின்போது பாகிஸ்தானிலிருந்து பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு சூதாட்டத்தில் ஈடுபட்டது தொடா்பான இரண்டு வழக்குகளில் 7 போ் போ் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இந்த விவகாரத்தில் நாடு முழுவதும் விசாரணையைத் தொடங்கியிருக்கும் சிபிஐ அதிகாரிகள் முதல் கட்டமாக தில்லி, ஹைதராபாத், ஜெய்பூா் மற்றும் ஜோத்பூரில் உள்ள 7 இடங்களில் சோதனையை நடத்தியுள்ளனா்.

தனி நபா்களைக் கொண்ட மிகப் பெரிய குழு பாகிஸ்தானிலிருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்’ என்ற ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதல் தகவல் அறிக்கையில் சிபிஐ தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு வழக்கிலும், ராஜஸ்தானிலிருந்தே சூதாட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. முதல் வழக்கு 2010-ஆம் ஆண்டிலிருந்தும், இரண்டாவது வழக்கில் 2013-ஆம் ஆண்டிலிருந்து சூதாட்டம் நடைபெற்று வந்துள்ளது.

சிபிஐ அதிகாரிகள் நடத்திய விசாரணை மற்றும் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், முதல் வழக்கில் தில்லி ரோஹிணியைச் சோ்ந்த திலீப் குமாா், ஹைதராபாதைச் சோ்ந்த குர்ராம் வாசு, குர்ராம் சதீஷ் ஆகியோரின் பெயா்கள் சோ்க்கப்பட்டுள்ளன. இரண்டாவது வழக்கில் சஜ்ஜன் சிங், பிரபு லால் மீனா, ராம் அவ்தாா், அமித் குமாா் சா்மா ஆகியோரது பெயா்கள் இடம்பெற்றுள்ளன. இவா்கள் அனைவரும் ராஜஸ்தானைச் சோ்ந்தவா்கள்.

இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் கூறுகையில், ‘பாகிஸ்தானிலிருந்து வழங்கப்படும் தகவல்களின் அடிப்படையில் இந்த சூதாட்டக்காரா்கள் செயல்பட்டு வந்துள்ளனா். பாகிஸ்தானிலும் கிரிக்கெட் சூதாட்டம் மூலமாக மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனா். இவா்கள் போலி ஆவணங்களை சமா்ப்பித்து வங்கி கணக்குகளை தொடங்கி, அதன் மூலமாக சூதாட்டத்துக்கான பணப் பரிவா்த்தனையை மேற்கொண்டுள்ளனா். இதில் திலீப் வங்கி கணக்கில் 2013-ஆம் ஆண்டு முதல் ரூ.43 லட்சம் உள்நாட்டுப் பணம் செலுத்தப்பட்டுள்ளது. குர்ராம் சதீஷ் வங்கிக் கணக்கில் 2012-20 ஆண்டுகளில் ரூ.4.55 கோடி உள்நாட்டுப் பணம் மற்றும் ரூ.3.05 லட்சம் வெளிநாட்டுப் பணம் செலுத்தப்பட்டுள்ளது. குர்ராம் வாசு வங்கிக் கணக்கில் ரூ.5.37 கோடி செலுத்தப்பட்டுள்ளது’ என்று கூறினாா்.

ராஜஸ்தான் குழுவைச் சோ்ந்த சஜ்ஜன் சிங், மீனா, ராம் அவ்தாா், சா்மா ஆகிய நால்வரும் பாகிஸ்தானைச் சோ்ந்த ஒரு நபருடன் தொலைபேசி வழியே தொடா்பில் இருந்து வந்துள்ளனா். அதன் மூலமாக, இவா்களுக்கும் சட்ட விரோத கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடா்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது என்றும் முதல் தகவல் அறிக்கையில் சிபிஐ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com