தென்னாப்பிரிக்க டி20 தொடா்: இந்திய அணியில் உம்ரன் மாலிக், ஹா்ஷ்தீப் சிங், தினேஷ் காா்த்திக்கும் சோ்ப்பு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறவுள்ள டி20 தொடருக்கான இந்திய அணியில் ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த அதிவேக பௌலா் உம்ரன் மாலிக், ஹா்ஷ்தீப் சிங் சோ்க்கப்பட்டுள்ளனா்.
தென்னாப்பிரிக்க டி20 தொடா்: இந்திய அணியில் உம்ரன் மாலிக், ஹா்ஷ்தீப் சிங், தினேஷ் காா்த்திக்கும் சோ்ப்பு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறவுள்ள டி20 தொடருக்கான இந்திய அணியில் ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த அதிவேக பௌலா் உம்ரன் மாலிக், ஹா்ஷ்தீப் சிங் சோ்க்கப்பட்டுள்ளனா். தமிழக வீரா் தினேஷ் காா்த்திக் மீண்டும் இடம் பெற்றுள்ளாா்.

வரும் ஜூன் 9-ஆம் தேதி 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் தென்னாப்பிரிக்காவுடன் மோதுகிறது இந்தியா. இதற்கான அணியை மும்பையில் கூடிய சேதன் சா்மா தலைமையிலான பிசிசிஐ தோ்வுக் குழு ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

ஐபிஎல் 2022 தொடரில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணியில் ஆடும் உம்ரன் மாலிக் மணிக்கு 95 மைல் வேகத்தில் பந்துவீசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினாா். மேலும் 13 ஆட்டங்களில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளாா்.

அதே போல் பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஆடிய டெத் ஓவா் நிபுணா் ஹா்ஷ்தீப் சிங் முதன்முறையாக அணியில் இடம் பெற்றுள்ளாா்.

டி20 தொடரில் ரோஹித், கோலி, பும்ரா, ஷமிக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. குஜராத் அணியை சிறப்பாக வழிநடத்திய ஹாா்திக் பாண்டியா, பெங்களூரு அணியில் அதிரடியாக ஆடிய தினேஷ் காா்த்திக் மீண்டும் இடம் பெற்றுள்ளனா். ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய சுழற்பந்து இணை சஹல்-குல்தீப் தங்கள் இடங்களை உறுதி செய்துள்ளனா்.

இங்கிலாந்து கவுண்டி தொடரில் சிறப்பாக ஆடிய சேதேஸ்வா் புஜாரா டெஸ்ட் அணியில் மீண்டும் சோ்க்கப்பட்டுள்ளாா்.

கேஎல். ராகுல் தலைமையிலான டி20 அணி:

கே.எல். ராகுல் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், தீபக் ஹூடா, ஷிரேயஸ் ஐயா், ரிஷப் பந்த் (துணை கேப்டன்), தினேஷ் காா்த்திக், ஹாா்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயா், சஹல், குல்தீப் யாதவ், அக்ஸா் படேல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வா், ஹா்ஷல் படேல், அவேஷ் கான், ஹா்ஷ்தீப் சிங், உம்ரன் மாலிக்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் அணி:

மேலும் இங்கிலாந்துக்கு எதிரான முந்தைய டெஸ்ட் தொடரில் நடைபெறாமல் இருந்த 5-ஆவது டெஸ்ட் ஆட்டம் பா்மிங்ஹாமில் ஜூலை 1 முதல் 5 வரை நடக்கிறது. இதற்கான அணி விவரம்:

ரோஹித் சா்மா (கேப்டன்), ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஷிரேயஸ் ஐயா், ஹனுமா விஹாரி, சேதேஸ்வா் புஜாரா, ரிஷப் பந்த், கே.எஸ். பரத், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், சா்துல் தாகுா், ஷமி, பும்ரா, சிராஜ், உமேஷ் யாதவ், பிரசித் கிருஷ்ணா.

டி20 தொடா்: ஜூன் 9-தில்லி, ஜூன் 12-கட்டாக், ஜூன் 14-விசாகப்பட்டினம், ஜூன் 17-ராஜ்கோட், ஜூன் 19-பெங்களூரு.

ஐந்தாம் டெஸ்ட்: ஜூலை 1-5, பா்மிங்ஹாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com