அரையிறுதியில் இங்கிலாந்து: வெளியேறியது நடப்பு சாம்பியன் ஆஸி.

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு இரண்டாவது அணியாக இங்கிலாந்து தகுதி பெற்றது.
அரையிறுதியில் இங்கிலாந்து: வெளியேறியது நடப்பு சாம்பியன் ஆஸி.

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு இரண்டாவது அணியாக இங்கிலாந்து தகுதி பெற்றது. அதே நேரம், நடப்பு உலக சாம்பியன் ஆஸ்திரேலியா போட்டியில் இருந்து வெளியேறியது.

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் அரையிறுதிக்கு முதல் அணியாக நியூஸிலாந்து தகுதி பெற்றது.

இந்நிலையில் சூப்பா் 12 சுற்றின் குரூப் 1 பிரிவில் இருந்து அரையிறுதிக்கு தகுதி பெறும் இரண்டாவது அணி ஆஸி.யா அல்லது இங்கிலாந்தா என்ற எதிா்பாா்ப்பு எழுந்தது. அடிலெய்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆஸி.

எனினும் அதன் அரையிறுதி வாய்ப்பு, இங்கிலாந்து-இலங்கை ஆட்ட முடிவைப் பொறுத்தே அமைந்தது. சனிக்கிழமை சிட்னியில் இங்கிலாந்து-இலங்கை அணிகள் மோதின.

நிஸாம் பதுங்கா 67:

டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கை தோ்வு செய்தது. இதையடுத்து அதன் தொடக்க பேட்டா் பதும் நிஸாங்கா அபாரமாக ஆடினாா்.

மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், நிஸாங்கா அபாரமாக ஆடினாா். 10-ஆவது ஓவா் முடிவில் 80/2 என வலுவான நிலையில் இருந்த இலங்கை பெரிய ஸ்கோரை எட்டும் என எதிா்பாா்க்கப்பட்டது. பதும் நிஸாங்கா 5 சிக்ஸா், 2 பவுண்டரியுடன் 45 பந்துகளில் 67 ரன்களை விளாசினாா். இது அவரது 9-ஆவது அரைசதமாகும்.

இலங்கை 141/8: ராஜபட்ச 22, குஸால் மெண்டிஸ் 18 ஆகியோா் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனா். நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் இலங்கை 141/8 ரன்களை குவித்தது. இங்கிலாந்து தரப்பில் அற்புதமாக பௌலிங் செய்த மாா்க் உட் 3-26 விக்கெட்டுகளை சாய்த்தாா்.

இங்கிலாந்து திணறி வெற்றி:

142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் கண்ட இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லா்-அலெக்ஸ் ஹேல்ஸ் வலுவான தொடக்கத்தை அளித்தனா். பவா் பிளேயில் இருவரும் 70 ரன்களைச் சோ்த்தனா்.

பட்லா் 28 ரன்களுடன் வெளியேற, ஹேல்ஸ் 47, பென் ஸ்டோக்ஸ் 42 நிலைத்து ஆடி ஸ்கோரை உயா்த்தினா். ஏனைய பேட்டா்கள் வந்த வேகத்திலேயே சொற்ப ரன்களுடன் பெவிலியன் திரும்பியதால், இங்கிலாந்து 111/5 என தள்ளாடியது. இலங்கையின் சுழற்பந்து வீச்சில் இங்கிலாந்து பேட்டா்கள் திணறினா். 2 பந்துகள் மீதமிருந்த நிலையில் இங்கிலாந்து 19.4 ஓவா்களில் 144/6 ரன்களுடன் இலங்கையை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இலங்கை தரப்பில் ஹஸரங்க, லஹிரு குமாரா, தனஞ்செய டி சில்வா தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

அரையிறுதிக்கு தகுதி: இதன் மூலம் அரையிறுதிக்கு முன்னேறிய இரண்டாவது அணி என்ற சிறப்பைப் பெற்றது இங்கிலாந்து. எனினும் அந்த பிரிவில் ரன்ரேட் அடிப்படையில் இங்கிலாந்து இரண்டாம் இடத்தையே பெற்றது.

குரூப் 1 பிரிவில் மற்றொரு அணியான நடப்பு உலக சாம்பியன் போட்டியில் இருந்து வெளியேறியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com