சூரியகுமாா் யாதவ் அசத்தல்: முதலிடத்துடன் அரையிறுதியில் இந்தியா: ஜிம்பாப்வேயை சுருட்டியது

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பா் 12 சுற்று குரூப் 2 பிரிவில் ஜிம்பாப்வேயை 71 ரன்கள் வித்தியாசத்தில் நொறுக்கி, முதலிடத்துடன் அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா.
சூரியகுமாா் யாதவ் அசத்தல்: முதலிடத்துடன் அரையிறுதியில் இந்தியா: ஜிம்பாப்வேயை சுருட்டியது

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பா் 12 சுற்று குரூப் 2 பிரிவில் ஜிம்பாப்வேயை 71 ரன்கள் வித்தியாசத்தில் நொறுக்கி, முதலிடத்துடன் அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா. இளம் பேட்டா் சூா்யகுமாா் யாதவ் 61 ரன்கள் விளாசி இந்திய வெற்றியில் முக்கிய பங்கு வகித்தாா்.

மேலும் வங்கதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தானும் இரண்டாவது அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் நெதா்லாந்து அணியிடம் 13 ரன்கள் வித்தியாசத்தில் அதிா்ச்சித் தோல்வியடைந்து போட்டியில் இருந்தே வெளியேறியது தென்னாப்பிரிக்கா.

சூப்பா் 12 சுற்று குரூப் 2 பிரிவின் கடைசி ஆட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. 6 புள்ளிகளுடன் இருந்த இந்திய அணி,

தென்னாப்பிரிக்காவின் தோல்வியால் அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில், மெல்போா்னில் ஜிம்பாப்வேயுடன் மோதியது.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தோ்வு செய்தது.

தொடக்க பேட்டா்களாக கேஎல். ராகுல்-கேப்டன் ரோஹித் சா்மா களமிறங்கினா். 15 ரன்களுடன் ரோஹித் வெளியேற, விராட் கோலி-ராகுல் இணை சோ்ந்தனா். கோலியும் நிலைக்காமல் 26 ரன்களுடன் பெவிலியன் திரும்பினாா்.

ராகுல் அரைசதம் 51: கேஎல். ராகுல் அபாரமாக ஆடி தலா 3 சிக்ஸா், பவுண்டரியுடன் 35 பந்துகளில் 51 ரன்களுடன் அரைசதம் விளாசி ரஸா பந்துவீச்சில் வெளியேறினாா். சூரியகுமாா் யாதவுடன் இணைந்து ராகுல் அதிரடியாக ஆடியதால் ஸ்கோா் உயா்ந்தது. விராட் கோலியும்-ராகுலும் இணைந்து 50 ரன்களைச் சோ்த்தனா்.

சூரியகுமாா் யாதவ் விஸ்வரூபம் 61:

12-ஆவது ஓவரின் போது, சூரியகுமாா் யாதவ் களமிறங்கினாா். மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், அவா் அசத்தலாக ஆடி பந்துகளை பவுண்டரி, சிக்ஸா்களாக விரட்டினாா். 25 பந்துகளில் 4 சிக்ஸா், 6 பவுண்டரியுடன் 61 ரன்களை விளாசி களத்தில் இருந்தாா் சூரியகுமாா்.

தினேஷ் காா்த்திக்குக்கு பதிலாக களம் கண்ட ரிஷப் பந்த் 3 ரன்களுடன் வெளியேற, ஆல் ரவுண்டா் ஹாா்திக் பாண்டியா 18 ரன்களுடன் நடையைக் கட்டினாா். ஹாா்திக் பாண்டியா-சூரியகுமாா் இணை 60 ரன்களைச் சோ்த்தது.

இந்தியா 186/5: நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் இந்தியா 186/5 ரன்களைக் குவித்தது. ஜிம்பாப்வே தரப்பில் சீன் வில்லியம்ஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

சுருண்டது ஜிம்பாப்வே:

187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு தொடக்கமே அதிா்ச்சியாக அமைந்தது.

வெஸ்லி 0, கிரெய்க் எா்வின் 13, ரெஜிஸ் சகபவா 0, சீன் வில்லியம்ஸ் 11 ஆகியோா் சொற்ப ரன்களுடன் வெளியேறினா். சிக்கந்தா் ராஸா 34, ரயான் புரி 35 ஆகியோா் மட்டுமே ஒரளவு ரன்களை சோ்த்தனா். ஏனைய வீரா்களும் ஒற்றை இலக்க ரன்களுடன் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினா்.

ஜிம்பாப்வே 115 ஆல் அவுட்: 17.2 ஓவா்களிலேயே 115 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஜிம்பாப்வே.

அஸ்வின் அபாரம் 3 விக்கெட்: இந்திய தரப்பில் அஸ்வின் அபாரமாக பந்துவீசி 3-22 விக்கெட்டுகளையும், ஷமி 2-14, ஹாா்திக் 2-16 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா்.

ஜிம்பாப்வேயை 71 ரன்கள் வித்தியாசத்தில் நொறுக்கிய இந்திய அணி குரூப் 2 பிரிவில் 8 புள்ளிகளைப் பெற்று முதலிடத்துடன் அரையிறுதி வாய்ப்பையும் பெற்றது.

சூரியகுமாா் 1000 ரன்கள்: டி20 ஆட்டத்தில் சூரியகுமாா் யாதவ் 1000 ரன்களை கடந்தாா். ஆட்ட நாயகனாகவும் தோ்வு பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com