சானியா-சோயிப் மாலிக் திருமண உறவில் விரிசல்?

நட்சத்திர தம்பதிகளான சானியா-சோயிப் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  
சானியா தனது மகன் இஷானுடன்
சானியா தனது மகன் இஷானுடன்
Published on
Updated on
1 min read

நட்சத்திர தம்பதிகளான சானியா-சோயிப் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் இரண்டு பேரும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு நான்கு வயதில் இஷான் என்ற மகன் உள்ளார். 

இந்த நிலையில் சோயிப் மாலிக் தனது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சானியா மிர்சாவை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், நட்சத்திர தம்பதிகளான சானியா-சோயிப்ரா  இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. 

சோயிப் மாலிக்-சானியாவுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நட்சத்திர தம்பதிகள் சில காலமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். எனினும், அவர்களின் பிரிவுகளுக்கான சாரியான காரணம் எதுவும் இதுவரை வெளியாகிவில்லை. 

சானியா மிர்சாவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில், "உடைந்த இதங்கள் எங்கே செல்கின்றன. அல்லாவை தேடி" என்று பதிவிட்டுள்ளாளார். 

கடந்த சில நாள்களுக்கு முன்பு அவரது மகனுடன் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துகொண்டார். அதில், "கடினமான நாள்களை கடந்து செல்லும் தருணங்கள்" என்று பதிவிட்டிருந்தார்.  இன்ஸ்டாகிராமில் சானியாவின் பதிவு அவரது ரசிகர்களை மேலும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இதற்கிடையில், இஷான் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து சானியா பதிவிட்டுள்ளார்.

அதில், "இந்த வாழ்க்கையில் பல விஷயங்கள் உள்ளன, ஆனால் எனக்கு பிடித்த ஒன்று உனக்கு அம்மாவாக இருப்பது. நீ பிறந்த நாளே என் வாழ்வின் சிறந்த நாள், நீ கூட சிரித்தாய். நீ கனிவான மற்றும் மிகவும் மதிக்கத்தக்க இளைஞனாக வளர்ந்து வருகிறாய், உங்கள் அம்மாவாக இருப்பதில் நான் பெருமைப்பட முடியாது, ”என்று பதிவிட்டுள்ளார். 

மேலும், "நீ என்னை மேம்படுத்தி, தன்னலமற்ற மற்றும் நிபந்தனையற்ற அன்பை எனக்கு அளித்துள்ளாய். நான் உன்னை என் அன்பான மகனாக நேசிக்கிறேன், நீ எவ்வளவு வயதானாலும் என் குழந்தையாகவே நீ இருப்பாய், ”என்று அவர் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com