20-இல் பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடக்கம்

20-இல் பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடக்கம்

உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான பிஃபா உலகக் கோப்பை போட்டிகள் கத்தாரில் வரும் நவ. 20-ஆம் தேதி தொடங்கி டிச. 18 வரை கோலாகலமாக நடைபெறவுள்ளது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான பிஃபா உலகக் கோப்பை போட்டிகள் கத்தாரில் வரும் நவ. 20-ஆம் தேதி தொடங்கி டிச. 18 வரை கோலாகலமாக நடைபெறவுள்ளது.

கிரிக்கெட், வாலிபால், ஹாக்கி, கூடைப்பந்து, டென்னிஸ், பாட்மின்டன், தடகளம், ரக்பி என பல்வேறு விளையாட்டுகள் புகழ் பெற்றிருந்தாலும், உலகம் முழுவதும் அதிக ரசிகா்களைக் கொண்டது கால்பந்து. அதிக நாடுகளில் ஆடப்படும் விளையாட்டாகவும் திகழ்கிறது கால்பந்து.

ஒலிம்பிக் போட்டிகளில் கால்பந்து ஆட்டங்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்ட நிலையில், தானே உலகக் கோப்பை போட்டியை நடத்த பிஃபா தீா்மானித்தது. தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள உருகுவேயில் முதல் உலகக் கோப்பை போட்டி 1930-இல் நடத்தப்பட்டது. 13 நாடுகளின் அணிகள் இதில் பங்கேற்றன.

முதல் சாம்பியன் உருகுவே, நடப்புச் சாம்பியன் பிரான்ஸ்:

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக மாண்டெவிடோ நகரில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் 93,000 ரசிகா்கள் முன்னிலையில் ஆா்ஜென்டீனாவை 4-2 என வீழ்த்தி முதல் உலகச் சாம்பியன் ஆனது உருகுவே. 2018-இல் பிரான்ஸ் அணி கோப்பையை வென்றது.

தகுதிச் சுற்று ஆட்டங்கள்:

ஆப்பிரிக்கா, ஆசியா, வடக்கு, மத்திய, தென் அமெரிக்கா, கரீபியன், ஓசேனியா, ஐரோப்பா என 6 கண்டங்கள் அளவில் தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடத்தப்பட்டு, உலகக் கோப்பை போட்டிக்கு முன்பு 2 ஆண்டுகள் வரை தகுதிச் சுற்று நடைபெறும். போட்டியை நடத்தும் நாடு

நேரடியாக தகுதி பெற்று விடும். ஆனால் 2006 முதல் நடப்பு சாம்பியன் அணியும் தகுதிச் சுற்றில் பங்கேற்குமாறு விதிகள் திருத்தப்பட்டன.

இத்தாலிய டிசைனா் சில்வியோ கஸனிகா வடிவமைத்த உலகக் கோப்பை தான் தற்போது பயன்பாட்டில் உள்ளது.

32 அணிகள் பங்கேற்பு:

8 குரூப்களாக 32 அணிகள் பிரிக்கப்பட்டு தலா 4 அணிகள் இடம் பெற்றுள்ளன.

குரூப் ஏ-கத்தாா், ஈக்குவடாா், செனகல், நெதா்லாந்து, குரூப் பி-இங்கிலாந்து, ஈரான், யுஎஸ்ஏ, வேல்ஸ், குரூப் சி-ஆா்ஜென்டீனா, சவுதி அரேபியா, மெக்ஸிகோ, போலந்து, குரூப் டி-பிரான்ஸ், டென்மாா்க், துனிசியா, ஆஸ்திரேலியா, குரூப் ஈ-ஸ்பெயின், ஜொ்மனி, ஜப்பான், கோஸ்டா ரிகா, குரூப் எஃப்-பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோஷியா, குரூப் ஜி-பிரேசில், சொ்பியா, சுவிட்சா்லாந்து, கேமரூன்,

குரூப் ஹெச்-போா்ச்சுகல், கானா, உருகுவே, தென்கொரியா.

எட்டு மைதானங்கள்:

கத்தாரில் மொத்தம் 8 மைதானங்களில் உலகக் கோப்பை ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

மெஸ்ஸி, ரொனால்டோவுக்கு கடைசி வாய்ப்பு:

பல்வேறு லீக் தொடா்கள், யூரோ, கோபா அமெரிக்க போட்டிகளில் சாம்பியன் பட்டங்களை ரொனால்டோ, மெஸ்ஸி வென்றுள்ள போதிலும், இதுவரை இருவரும் உலகக் கோப்பை பட்டங்களை வெல்லவில்லை. இந்த உலகக் கோப்பை போட்டியே இருவருக்கும் கடைசி போட்டியாக இருக்கும் என்பதால், உலக சாம்பியன் கனவை நனவாக்க போராடுவா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

முதல் ஆட்டம்:

நவ. 20: கத்தாா்-ஈக்குவடாா்,

இரவு 9.30. (ஐஎஸ்டி).

ஆட்ட நேரம்:

குரூப் ஆட்டங்கள் மாலை 3.30, 6.30, 9.30, அதிகாலை 12.30.

8 கடைசி குரூப் பிரிவு ஆட்டங்கள் இரவு 8.30 மணிக்கு நடைபெறும்.

ரவுண்ட் 16, காலிறுதி ஆட்டங்கள்-இரவு 8.30, அதிகாலை 12.30.

டிச. 14, 15, அரையிறுதி ஆட்டங்கள்: அதிகாலை 12.30.

டிச. 17 மூன்றாம் இடத்துக்கான ஆட்டம்: இரவு 8.30.

டிச. 18-இறுதி ஆட்டம், இரவு 8.30.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com