இந்தியாவுக்கு எதிராக விளையாடவுள்ள நியூசிலாந்து அணி அறிவிப்பு: இரு பிரபல வீரர்கள் நீக்கம்!

இந்தியாவுக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ள நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணி (கோப்புப் படம்)
நியூசிலாந்து அணி (கோப்புப் படம்)

இந்தியாவுக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ள நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு இந்திய அணி நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. நவம்பர் 18 முதல் தொடங்கும் டி20 தொடர் நவம்பர் 22 அன்று முடிவடைகிறது. டி20 ஆட்டங்கள் இந்திய நேரம் மதியம் 12 மணிக்குத் தொடங்குகின்றன. ஒருநாள் தொடர் நவம்பர் 25 அன்று தொடங்கி நவம்பர் 30 அன்று முடிவடைகிறது. இந்த ஆட்டங்கள் இந்திய நேரம் காலை 7 மணிக்குத் தொடங்குகின்றன. 

டி20 தொடருக்கு பாண்டியா தலைமையிலான இந்திய அணியும் ஒருநாள் தொடருக்கு ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணியும் பங்கேற்கின்றன.

ரோஹித் சர்மா, கோலி, ராகுல் ஆகியோருக்கு இத்தொடரிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் ரிஷப் பந்த் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அணியில் இடம்பெற்ற 8 வீரர்கள் டி20 தொடரில் இடம்பெற்றுள்ளார்கள்.

இந்நிலையில் டி20 தொடர், ஒருநாள் தொடர் ஆகிய இரண்டிலும் விளையாடவுள்ள நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளிலும் பிரபல வீரர்களான மார்டின் கப்தில், டிரெண்ட் போல்ட் ஆகியோர் இடம்பெறவில்லை. அதிரடி வீரர் ஃபின் ஆலன் இரு அணிகளிலும் இடம்பெற்றுள்ளார். 2017-க்குப் பிறகு ஆடம் மில்ன், ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ளார். 

நியூசிலாந்து ஒருநாள் அணி: கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், கான்வே, லாகி ஃபெர்குசன், டேரில் மிட்செல், ஆடம் மில்ன், ஜிம்மி நீஷம், கிளென் பிளிப்ஸ், மிட்செல் சான்ட்னர், டிம் செளதி, டாம் லதம் (விக்கெட் கீப்பர்), மேட் ஹென்றி.

நியூசிலாந்து டி20 அணி: கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், கான்வே, லாகி ஃபெர்குசன், டேரில் மிட்செல், ஆடம் மில்ன், ஜிம்மி நீஷம், கிளென் பிளிப்ஸ், மிட்செல் சான்ட்னர், டிம் செளதி, இஷ் சோதி, பிளேர் டிக்னர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com