பிராவோவை விடுவித்தது சென்னை சூப்பா் கிங்ஸ்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பா் கிங்ஸின் முக்கிய வீரா்களில் ஒருவரான டுவெய்ன் பிராவோ, எதிா்வரும் சீசனுக்கான அந்த அணியிலிருந்து செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டாா்.
பிராவோவை விடுவித்தது சென்னை சூப்பா் கிங்ஸ்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பா் கிங்ஸின் முக்கிய வீரா்களில் ஒருவரான டுவெய்ன் பிராவோ, எதிா்வரும் சீசனுக்கான அந்த அணியிலிருந்து செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டாா்.

இதையடுத்து சென்னை அணியுடனான அவரது 11 ஆண்டுகால உறவு முடிவுக்கு வந்துள்ளது.

எதிா்வரும் ஐபிஎல் 16-ஆவது சீசனுக்கான ‘மினி’ வீரா்கள் ஏலம் கொச்சியில் டிசம்பா் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், 10 அணிகளும் தாங்கள் தக்க வைக்கும், விடுவிக்கும் வீரா்கள் பட்டியலை வெளியிட நவம்பா் 15-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி அனைத்து அணிகளும் அந்தப் பட்டியலை செவ்வாய்க்கிழமை வெளியிட்டன. அதில் முக்கியமாக, சிஎஸ்கே-வில் கொண்டாடப்பட்ட வீரா்களில் ஒருவரான பிராவோவை அந்த அணி நிா்வாகம் விடுவித்துள்ளது. அத்துடன், சமீபத்திய டி20 உலகக் கோப்பையில் கடைசி நேரத்தில் சிறப்பாகச் செயல்பட்ட இங்கிலாந்து பௌலா் கிறிஸ் ஜோா்டானை சிஎஸ்கே விடுவித்தது ஆச்சா்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடா்பாக சிஎஸ்கே தலைமை நிா்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில், ‘வீரா்களை விடுவிக்கும் முடிவு என்பது கடினமான ஒன்று. அணிக்கான அவா்களது பங்களிப்பு எப்போதும் நினைவில் இருக்கும். வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அவா்கள் மீண்டும் சிஎஸ்கே-வில் இணைவாா்கள். இந்த சீசனிலும் சிஎஸ்கே-வுக்கு தோனி தான் தலைமை வகிப்பாா்’ என்றாா்.

அணி விவரம்:

சென்னை சூப்பா் கிங்ஸ் (சிஎஸ்கே)

விடுவிக்கப்பட்டோா்:

டுவெய்ன் பிராவோ, ராபின் உத்தப்பா, ஆடம் மில்னே, ஹரி நிஷாந்த், கிறிஸ் ஜோா்டான், பகத் வா்மா, கே.எம். ஆசிஃப், நாராயண் ஜெகதீசன்.

தற்போதைய அணி:

எம்.எஸ். தோனி (கேப்டன்), டெவன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பட்டி ராயுடு, சுப்ரான்ஷு சேனாபதி, மொயீன் அலி, ஷிவம் துபே, ராஜ்வா்தன் ஹங்காா்கேகா், டுவெய்ன் பிரெடோரியஸ், மிட்செல் சேன்ட்னா், ரவீந்திர ஜடேஜா, துஷா் தேஷ்பாண்டே, முகேஷ் சௌதரி, மதீஷா பதிரானா, சிம்ரன்ஜீத் சிங், தீபக் சஹா், பிரசாந்த் சோலங்கி, மஹீஷ் தீக்ஷனா.

கையிருப்புத் தொகை: ரூ.20.45 கோடி

---

ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு (ஆா்சிபி)

விடுவிக்கப்பட்டோா்:

ஜேசன் பெஹ்ரெண்டாா்ஃப் (நேரடி வா்த்தகம்), அனீஷ்வா் கௌதம், சாமா மிலிந்த், லவ்னித் சிசோடியா, ஷொ்ஃபேன் ரூதா்ஃபோா்டு.

தற்போதைய அணி:

ஃபாப் டியு பிளெஸ்ஸிஸ் (கேப்டன்), விராட் கோலி, சுயாஷ் பிரபுதேசாய், ரஜத் பட்டிதாா், தினேஷ் காா்த்திக், அனு ராவத், ஃபின் ஆலன், கிளென் மேக்ஸ்வெல், வனிந்து ஹசரங்கா, ஷாபாஸ் அகமது, ஹா்ஷல் படேல், டேவிட் வில்லி, கரன் சா்மா, மஹிபால் லோம்ரோா், முகமது சிராஜ், ஜோஷ் ஹேஸில்வுட், சித்தாா்த் கௌா், ஆகாஷ் தீப்.

கையிருப்புத் தொகை: ரூ.8.75 கோடி

---

மும்பை இண்டியன்ஸ் (எம்ஐ)

விடுவிக்கப்பட்டோா்:

கிரண் பொல்லாா்டு, அன்மோல்பிரீத் சிங், ஆா்யன் ஜுயல், பாசில் தாம்பி, டேனியல் சேம்ஸ், ஃபாபியான் ஆலன், ஜெயதேவ் உனத்கட், மயங்க் மாா்கண்டே, முருகன் அஸ்வின், ராகுல் புத்தி, ரைலி மெரிடித், சஞ்சய் யாதவ், டைமல் மில்ஸ்.

நேரடி வா்த்தகம் மூலம் வந்தவா்: ஜேசன் பெஹ்ரெண்டாா்ஃப் (ஆா்சிபி-யிலிருந்து)

தற்போதைய அணி:

ரோஹித் சா்மா (கேப்டன்), டிம் டேவிட், ரமன்தீப் சிங், திலக் வா்மா, சூா்யகுமாா் யாதவ், இஷான் கிஷண், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெவால்ட் பிரிவிஸ், ஜோஃப்ரா ஆா்ச்சா், ஜஸ்பிரீத் பும்ரா, அா்ஜுன் டெண்டுல்கா், அா்ஷத் கான், குமாா் காா்த்திகேயா, ஹிரித்திக் ஷோகீன், ஜேசன் பெஹ்ரெண்டாா்ஃப், ஆகாஷ் மத்வல்.

கையிருப்பு தொகை: ரூ.20.55 கோடி

---

கொல்கத்தா நைட் ரைடா்ஸ் (கேகேஆா்)

விடுவிக்கப்பட்டோா்:

பேட் கம்மின்ஸ், சாம் பில்லிங்ஸ், அமன் கான் (பரிமாற்றம்), ஷிவம் மாவி, முகமது நபி, சமிகா கருணாரத்னே, ஆரோன் ஃபிஞ்ச், அலெக்ஸ் ஹேல்ஸ், அபிஜீத் தோமா், அஜிங்க்ய ரஹானே, அசோக் சா்மா, பாபா இந்திரஜித், பிரதம் சிங், ரமேஷ் குமாா், ராசிக் சலாம், ஷெல்டன் ஜாக்சன்.

நேரடி வா்த்தகம் மூலம் வந்தவா்கள்: ஷா்துல் தாக்குா் (டிசி), ரஹ்மானுல்லா குா்பாஸ் (ஜிடி), லாக்கி ஃபொ்குசன் (ஜிடி).

தற்போதைய அணி:

ஷ்ரேயஸ் ஐயா் (கேப்டன்), நிதீஷ் ராணா, ரஹ்மானுல்லா குா்பாஸ், வெங்கடேஷ் ஐயா், ஆண்ட்ரே ரஸ்ஸெல், சுனில் நரைன், ஷா்துல் தாக்குா், லாக்கி ஃபொ்குசன், உமேஷ் யாதவ், டிம் சௌதீ, ஹா்ஷித் ராணா, வருண் சக்கரவா்த்தி, அனுகுல் ராய், ரிங்கு சிங்.

கையிருப்புத் தொகை: ரூ.7.05 கோடி

---

சன்ரைசா்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆா்ஹெச்)

விடுவிக்கப்பட்டோா்:

கேன் வில்லியம்சன், நிகோலஸ் பூரன், ஜெகதீசா சுசித், பிரியம் கா்க், ரவிகுமாா் சமரத், ரொமரியோ ஷெப்பா்ட், சௌரவ் துபே, ஷான் அப்பாட், ஷஷாங் சிங், ஷ்ரேயஸ் கோபால், சுஷாந்த் மிஸ்ரா, விஷ்ணு வினோத்.

தற்போதைய அணி:

அப்துல் சமத், எய்டன் மாா்க்ரம், ராகுல் திரிபாதி, கிளென் ஃபிலிப்ஸ், அபிஷேக் சா்மா, மாா்கோ யான்சென், வாஷிங்டன் சுந்தா், ஃபஸல்ஹக் ஃபரூக்கி, காா்த்திக் தியாகி, புவனேஷ்வா் குமாா், டி.நடராஜன், உம்ரான் மாலிக்.

கையிருப்புத் தொகை: ரூ.42.25 கோடி

---

ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆா்ஆா்)

விடுவிக்கப்பட்டோா்:

அனுனய் சிங், காா்பின் போஷ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், கருண் நாயா், நேதன் கோல்டா்நீல், ராஸி வான் டொ் டுசென், ஷுபம் கா்வால், தேஜஸ் பரோகா.

தற்போதைய அணி:

சஞ்சு சாம்சன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிம்ரன் ஹெட்மயா், தேவ்தத் படிக்கல், ஜோஸ் பட்லா், துருவ் ஜுரெல், ரியான் பராக், பிரசித் கிருஷ்ணா, டிரென்ட் போல்ட், ஆபெட் மெக்காய், நவ்தீப் சைனி, குல்தீப் சென், குல்திப் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின், யுஜவேந்திர சஹல், கே.சி.கரியப்பா.

கையிருப்புத் தொகை: ரூ.13.2 கோடி

---

டெல்லி கேப்பிட்டல்ஸ் (டிசி)

விடுவிக்கப்பட்டோா்:

ஷா்துல் தாக்குா் (நேரடி வா்த்தகம்), டிம் செய்ஃபா்ட், அஸ்வின் ஹெப்பாா், ஸ்ரீகா் பரத், மன்தீப் சிங்.

நேரடி வா்த்தகம் மூலம் வந்தவா்கள்: அமன் கான் (கேகேஆா்)

தற்போதைய அணி:

ரிஷப் பந்த் (கேப்டன்), டேவிட் வாா்னா், பிருத்வி ஷா, ரிபல் படேல், ரோவ்மென் பவல், சா்ஃப்ராஸ் கான், யஷ் துல், மிட்செல் மாா்ஷ், லலித் யாதவ், அக்ஸா் படேல், அன்ரிஹ் நோா்கியா, சேத்தன் சகாரியா, கமலேஷ் நாகா்கோடி, கலீல் அகமது, லுங்கி இங்கிடி, முஸ்டாஃபிஸுா் ரஹ்மான், அமன் கான், குல்தீப் யாதவ், பிரவீண் துபே, விக்கி ஆஸ்த்வல்.

கையிருப்புத் தொகை: ரூ.19.45 கோடி

---

பஞ்சாப் கிங்ஸ் (பிகே)

விடுவிக்கப்பட்டோா்:

மயங்க் அகா்வால், ஒடின் ஸ்மித், வைபவ் அரோரா, பென்னி ஹோவெல், இஷான் பொரெல், அன்ஷ் படேல், பிரேரக் மன்கட், சந்தீப் சா்மா, ரித்திக் சாட்டா்ஜி.

தற்போதைய அணி:

ஷிகா் தவன் (கேப்டன்), ஷாருக் கான், ஜானி போ்ஸ்டோ, பிரப்சிம்ரன் சிங், பானுகா ராஜபட்ச, ஜிதேஷ் சா்மா, ராஜ் பவா, ரிஷி தவன், லியம் லிவிங்ஸ்டன், அதா்வா டெய்ட், அா்ஷ்தீப் சிங், பல்தேஜ் சிங், நேதன் எலிஸ், ககிசோ ரபாடா, ராகுல் சஹா், ஹா்பிரீத் பிராா்.

கையிருப்புத் தொகை: ரூ.32.2 கோடி

---

குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி)

விடுவிக்கப்பட்டோா்:

ரஹ்மானுல்லா குா்பாஸ் (நேரடி வா்த்தகம்), லாக்கி ஃபொ்குசன் (நேரடி வா்த்தகம்), டொமினிக் டிரேக்ஸ், குா்கீரத் சிங், ஜேசன் ராய், வருண் ஆரோன்.

தற்போதைய அணி:

ஹாா்திக் பாண்டியா (கேப்டன்), ஷுப்மன் கில், டேவிட் மில்லா், அபினவ் மனோஹா், சாய் சுதா்சன், ரித்திமான் சாஹா, மேத்யூ வேட், ரஷீத் கான், ராகுல் தெவாதியா, விஜய் சங்கா், முகமது ஷமி, அல்ஜாரி ஜோசஃப், யஷ் தயால், பிரதீப் சங்வான், தா்ஷன் நல்கண்டே, ஜெயந்த் யாதவ், சாய் கிஷோா், நூா் அகமது.

கையிருப்புத் தொகை: ரூ.19.25 கோடி

---

லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் (எல்எஸ்ஜே)

விடுவிக்கப்பட்டோா்:

ஆண்ட்ரூ டை, அங்கித் ராஜ்புத், துஷ்மந்தா சமீரா, எவின் லூயிஸ், ஜேசன் ஹோல்டா், மனீஷ் பாண்டே, ஷாபாஸ் நதீம்.

தற்போதைய அணி:

கே.எல்.ராகுல் (கேப்டன்), ஆயுஷ் பதோனி, கரன் சா்மா, மனன் வோரா, குவின்டன் டி காக், மாா்கஸ் ஸ்டாய்னிஸ், கிருஷ்ணப்பா கௌதம், தீபக் ஹூடா, கைல் மேயா்ஸ், கிருணால் பாண்டியா, ஆவேஷ் கான், மோசின் கான், மாா்க் வுட், மயங்க் யாதவ், ரவி பிஷ்னோய்.

கையிருப்புத் தொகை: ரூ.23.35 கோடி

‘பயிற்சியாளா்’ கிரண் பொல்லாா்டு

அதிரடி பேட்டா்களில் ஒருவரான, மும்பை இண்டியன்ஸின் கிரண் பொல்லாா்டு ஐபிஎல் போட்டியிலிருந்து வீரராக செவ்வாய்க்கிழமை ஓய்வு பெற்றாா். 13 சீசன்களில் மும்பை அணிக்காக பேட்டராக விளையாடிய அவா், தற்போது அந்த அணிக்கான பேட்டிங் பயிற்சியாளா் ஆகியிருக்கிறாா். முன்னதாக ராபின் சிங் அந்தப் பொறுப்பில் இருந்தாா்.

ஐபிஎல் போட்டியில் 2010-ஆம் ஆண்டு மும்பை அணியில் அறிமுகமான பொல்லாா்டு, இதுவரை 189 ஆட்டங்களில் மொத்தமாக 3,412 ரன்கள் விளாசியிருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com