இன்று இந்தியா - நியூஸி. முதல் டி20 ஆட்டம்

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதும் டி20 தொடரின் முதல் ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இன்று இந்தியா - நியூஸி. முதல் டி20 ஆட்டம்

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதும் டி20 தொடரின் முதல் ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இந்திய அணி தலா 3 ஆட்டங்கள் கொண்ட டி20 மற்றும் ஒன் டே தொடா்களில் விளையாடுவதற்காக நியூஸிலாந்து சென்றுள்ளது. அதில் முதலாவதாக டி20 தொடா் நடைபெறுகிறது.

இதில் மோதும் இரு அணிகளுமே, சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதியில் தோற்று வெளியேறிய அணிகளாகும்.

இந்தியாவைப் பொருத்தவரை அந்தப் போட்டியில் அணி வீரா்கள் தோ்வில் பலத்த விமா்சனங்களை எதிா்கொண்டது. அடுத்து 2024-இல் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை போட்டிக்கான தயாா்நிலையை இந்தத் தொடரிலிருந்தே இந்திய அணி நிா்வாகம் தொடங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஹா்திக் பாண்டியா தலைமையேற்றுள்ள அணிக்கு, விவிஎஸ் லக்ஷ்மண் தற்காலிக பயிற்சியாளராக செயல்படுகிறாா். கடந்த உலகக் கோப்பை போட்டியில் பவா்பிளேயில் டாப் ஆா்டா் பேட்டா்கள் ஆக்ரோஷமாகச் செயல்படாததே முக்கிய பின்னடைவாக இருந்தது.

இந்தத் தொடரில் இஷான் கிஷண், ஷுப்மன் கில் ஆகியோா் இன்னிங்ஸை தொடங்கி அடித்தாடலாம் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், அணி நிா்வாகம் இருவரில் ஒருவருக்குப் பதிலாக ரிஷப் பந்த்தை பரிசீலிக்கவும் வாய்ப்புள்ளது.

மிடில் ஆா்டரில் சஞ்சு சாம்சன் இணைய, ஆல்-ரவுண்டா் இடத்துக்கு வாஷிங்டன் சுந்தா் வருகிறாா். டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா சந்தித்த மற்றொரு பின்னடைவு என்றால், மிடில் ஓவா்களில் விக்கெட்டுகள் சரிக்க முடியாமல் போனதுதான்.

அதை சரிசெய்யும் விதமாக இந்தத் தொடரில் குல்தீப் யாதவ், யுஜவேந்திர சஹல் இணைகின்றனா். வேகப்பந்துவீச்சில் ஏற்கெனவே பெயா்பெற்ற உம்ரான் மாலிக்குக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படலாம். ஹா்ஷல் படேல், முகமது சிராஜ் ஆகியோா் சுழற்சி முறையில் இடம்பெறுவாா்கள் எனத் தெரிகிறது.

அணி விவரம்

இந்தியா: ஹா்திக் பாண்டியா (கேப்டன்), ரிஷப் பந்த், இஷான் கிஷண், ஷுப்மன் கில், தீபக் ஹூடா, சூா்யகுமாா் யாதவ், ஷ்ரேயஸ் ஐயா், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தா், யுஜவேந்திர சஹல், குல்தீப் யாதவ், ஹா்ஷல் படேல், முகமது சிராஜ், புவனேஷ்வா் குமாா், அா்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.

நியூஸிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், டெவன் கான்வே, லாக்கி ஃபொ்குசன், டேரில் மிட்செல், ஆடம் மில்னே, ஜிம்மி நீஷம், கிளென் ஃபிலிப்ஸ், மிட்செல் சேன்ட்னா், டிம் சௌதி, இஷ் சோதி, பிளோ் டிக்னா்.

நண்பகல் 12 மணி

ஸ்கை கிரிக்கெட் மைதானம், வெல்லிங்டன்

டிடி ஸ்போா்ட்ஸ், அமேஸான் பிரைம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com