சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்காதது ஏன்?: பாண்டியாவின் தெளிவான பதில்

நியூசிலாந்து டி20 தொடரில் சஞ்சு சாம்சன் உள்பட சில வீரர்களுக்கு வாய்ப்பளிக்காதது பற்றி...
சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்காதது ஏன்?: பாண்டியாவின் தெளிவான பதில்

நியூசிலாந்து டி20 தொடரில் சஞ்சு சாம்சன் உள்பட சில வீரர்களுக்கு வாய்ப்பளிக்காதது பற்றி இந்திய அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் நேற்று மோதிய 3-ஆவது டி20 ஆட்டம் ‘டை’ ஆனது. இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில், 2-வது ஆட்டத்தில் வெற்றியைப் பதிவு செய்ததன் அடிப்படையில் 1-0 என இந்தியா தொடரைக் கைப்பற்றியது. முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

இந்த டி20 தொடரில் சஞ்சு சாம்சன், ஷுப்மன் கில், குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. முக்கியமாக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படாததற்குச் சமூகவலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்தார்கள். இதுபற்றிய கேள்விக்கு கேப்டன் பாண்டியா பதில் கூறியதாவது:

இது என்னுடைய அணி. எந்த அணி சரியாக இருக்கும் என்பதை நானும் பயிற்சியாளரும் முடிவு செய்வோம். இன்னும் காலம் இருக்கிறது. எல்லோரும் அவரவருக்கான வாய்ப்புகளைப் பெறுவார்கள். அப்படி வாய்ப்பு கிடைக்கும்போது அது நீண்ட பயணமாக இருக்கும். இது சிறிய தொடர் என்பதால் எல்லோருக்கும் வாய்ப்பளிப்பது கடினம். பெரிய தொடராக இருந்திருந்தால் இன்னும் அதிகமான வீரர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்திருக்கும். அணியில் அடிக்கடி வீரர்களை மாற்றுவது எனக்குப் பிடிக்காது. அணிக்கு என்ன தேவையோ அதைத்தான் செய்தேன். 6-வதாகப் பந்துவீசும் ஒருவர் தேவைப்பட்டார். தீபக் ஹூடா அதனால் தான் தேர்வானார். நான் ஒரு வீரரைத் தேர்வு செய்யாமல் போனால் அதற்குத் தனிப்பட்ட காரணங்கள் இல்லை என்பதை அறிவார்கள் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com