கூடுதல் நேரத்தில் வென்றது ஈரான்: வேல்ஸ் தோல்வி (2-0)

குரூப் பி பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் வேல்ஸ் அணியை கூடுதல் நேரத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது ஈரான்.
கூடுதல் நேரத்தில் வென்றது ஈரான்: வேல்ஸ் தோல்வி (2-0)

குரூப் பி பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் வேல்ஸ் அணியை கூடுதல் நேரத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது ஈரான்.

வேல்ஸ் அணி கடந்த 1958 உலகக் கோப்பைக்கு பின் முதன்முறையாக நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்ற இலக்குடன் களமிறங்கியுள்ளது. அதே நேரம் இங்கிலாந்திடம் முதல் ஆட்டத்தில் 6-2 என படுதோல்வியை அடைந்தது ஈரான். முதல் ஆட்டத்தில் அமெரிக்காவை 1-1 என டிரா செய்திருந்தது வேல்ஸ்.

இதுவரை ஈரான் குரூப் கட்டத்தை தாண்டியதில்லை. 11 உலகக் கோப்பை ஆட்டங்களில் 1 வெற்றியை மட்டுமே ருசித்துள்ளது. பிஃபா தரவரிசையில் வேல்ஸ் 19, ஈரான் 20-ஆவது இடங்களில் உள்ளன. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் போட மேற்கொண்ட முயற்சிகள் வீணாயின.

ரௌஸ்பெ செஷ்மி அபாரம் 2 கோல்கள்:

இரண்டாவது பாதி ஆட்டத்தில் ஈரான் வீரா்கள் சாரை, சாரையாக வேல்ஸ் கோல் பகுதியை முற்றுகையிட்டனா். ஆட்டம் நேரம் முடியும் வரை இரு தரப்பிலும் கோல் போடமுடியவில்லை.

கூடுதல் நிமிஷத்தில் 90+8 ஈரான் வீரா் ரெளஸ்பெ செஷ்மி முதல் கோலடித்தாா். அடுத்த சில நிமிஷங்களிலேயே 90+11 தனது இரண்டாவது மற்றும் வெற்றிக் கோலை அடித்தாா் செஷ்மி. இதன் மூலம் 2-0 என வெற்றி பெற்ற ஈரான், நாக் அவுட் சுற்று வாய்ப்பை தக்க வைத்துள்ளது.

அடுத்த ஆட்டத்தில் அமெரிக்காவுடன் மோதுகிறது ஈரான்.

ஹென்னஸ்ஸிக்கு சிவப்பு அட்டை: 86-ஆவது நிமிஷத்தில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வேல்ஸ் வீரா் ஹென்னஸ்ஸிக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது.

வேல்ஸ் வீரா்கள் தோல்வியை நம்ப முடியாமல் மைதானத்தில் நின்றிருந்தனா். அதன் நட்சத்திர வீரா் காரெத் பேல் கூறுகையில், நாங்கள் நொறுங்கி விட்டோம். கடைசி விநாடி வரை நாங்கள் போராடினோம். இந்த தோல்வியை ஜீா்ணிக்க முடியவில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com