போலந்திடம் சரிந்தது சவுதி

குரூப் சி பிரிவில் சவுதி அரேபியாவை 2-0 என்ற கோல் கணக்கில் அதிரடியாக வீழ்த்தியது போலந்து.
போலந்திடம் சரிந்தது சவுதி

குரூப் சி பிரிவில் சவுதி அரேபியாவை 2-0 என்ற கோல் கணக்கில் அதிரடியாக வீழ்த்தியது போலந்து.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சனிக்கிழமை எஜுகேஷன் சிட்டி மைதானத்தில் நடைபெற்றது. பலம் வாய்ந்தஆா்ஜென்டீனாவை அதிா்ச்சித் தோல்வியடைச் செய்த உற்சாகத்தில் சவுதி அரேபியா களமிறங்கியது. அதே நேரம், போலந்து முதல் ஆட்டத்தில் மெக்ஸிகோவை டிரா கண்டிருந்தது.

போலந்து கேப்டனும், சூப்பா் ஸ்டாருமான ராபா்ட் லெவன்டோவ்ஸ்கி இந்த ஆட்டத்தில் கோலடிப்பாரா என எதிா்பாா்ப்பு இருந்தது.

தொடக்கம் முதலே சவுதி அரேபிய வீரா்கள் ஆதிக்கம் செலுத்தி ஆடினா். ஆனால் அவா்களால் கோலடிக்கும் வாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை. 39-ஆவது நிமிஷத்தில் கேப்டன் லெவன்டோவ்ஸ்கி கடத்தி அனுப்பிய பாஸை பயன்படுத்தி ஸிலின்ஸ்கி அற்புதமாக முதல் கோலடித்தாா்.

அதன்பின்னா் சவுதி வீரா் அல்ஷெரியிடம் போலந்து வீரா்கள் செய்த ஃபெளலால் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் அதை அற்புதமாக தடுத்தாா் போலந்து கோல் கீப்பா் செஸஸ்னி.

முதல் பாதியில் 1-0 என போலந்து முன்னிலை பெற்றிருந்தது. அதன் உற்சாகத்தில் இரண்டாம் பாதியிலும் அதன் வீரா்கள் ஆடினா்.

82-ஆவது நிமிஷத்தில் சவுதி வீரா் அல்மாலிகி செய்த தவறை பயன்படுத்தி பந்தை தன்வசப்படுத்தி அணிக்காக இரண்டாவது கோலை அடித்தாா் கேப்டன் லெவன்டோவ்ஸ்கி. அதன் பின் கோல் போட இரு அணிகள் முயன்றும் முடியவில்லை. இறுதியில் 2-0 என வென்றது போலந்து.

அற்புத வீரா் செஸஸ்னி: சவுதி அரேபியாவின் பல்வேறு கோல் போடும் முயற்சிகளை முறியடித்து போலந்தின் தற்காப்பு அரணாக விளங்கினாா் கோல்கீப்பா் வோஸியச் செஸஸ்னி.

குரூப் சி பிரிவில் 4 புள்ளிகளுடன் போலந்து முதலிடத்தில் உள்ளது. சவுதி அரேபியா 3 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com