இரட்டைச் சதமும் 7 சிக்ஸர்களும்: ருதுராஜ் நிகழ்த்திய சாதனைகள் என்னென்ன?

லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஓர் ஆட்டத்தில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள்...
ருதுராஜ் (கோப்புப் படம்)
ருதுராஜ் (கோப்புப் படம்)

லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 7 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் உள்ளிட்ட பல சாதனைகளை ருதுராஜ் நிகழ்த்தியுள்ளார்.

உத்தரப் பிரதேச அணி - மஹாராஷ்டிரம் அணிகளுக்கு இடையிலான விஜய் ஹசாரே கோப்பை காலிறுதி ஆட்டம் ஆமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற உத்தரப் பிரதேச அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

சமீபகாலமாகச் சிறப்பாக விளையாடி வரும் மஹாராஷ்டிர அணியின் கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் இன்றைய ஆட்டத்தில் இரட்டைச் சதமடித்து அசத்தினார். 109 பந்துகளில் சதமடித்த ருதுராஜ், 138 பந்துகளில் 150 ரன்களைப் பூர்த்தி செய்தார். அதற்குப் பிறகு இன்னும் அதிரடியாக விளையாடிய 153 பந்துகளில் இரட்டைச் சதமெடுத்தார். சுழற்பந்து வீச்சாளர் ஷிவா சிங் வீசிய 49-வது ஓவரில் 7 சிக்ஸர்களைத் தொடச்சியாக அடித்து சாதனை செய்தார் ருதுராஜ். அந்த ஓவரில் ஒரு நோ பால் வீசப்பட்டதால் 7-வது சிக்ஸரை அடிக்கும் வாய்ப்பு ருதுராஜுக்குக் கிடைத்தது. கடைசியில் 159 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 220 ரன்கள் எடுத்தார் ருதுராஜ். மஹாஷ்டிர அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் குவித்தது. 

இரட்டைச் சதம், ஒரு ஓவரில் 7 சிக்ஸர்களின் வழியாக ருதுராஜ் கெயிக்வாட் இன்று நிகழ்த்திய புதிய சாதனைகள்

ருதுராஜ்: 220* ரன்கள்

முதல் 50 ரன்கள் - 71 பந்துகள்
100 ரன்கள்: 109 பந்துகள்
150 ரன்கள் - 138 பந்துகள்
இரட்டைச் சதம் - 153 பந்துகள்
220* ரன்கள் - 159 ரன்கள்

முதல் 109 பந்துகளில் 100 ரன்களை எடுத்த ருதுராஜ் அதற்குப் பிறகு 50 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு 120 ரன்களைக் குவித்தார்.

* லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிக சராசரி கொண்ட வீரராக உள்ளார் ருதுராஜ் (குறைந்தபட்சம் 50 இன்னிங்ஸ்).

1. ருதுராஜ் - 58.71 (69 இன்னிங்ஸில் 3758 ரன்கள்)
2. கோலி - 56.50 (286 இன்னிங்ஸில் 13,786 ரன்கள்)
3. புஜாரா - 56.49 (115 இன்னிங்ஸில் 5254 ரன்கள்)

* 220* ரன்கள். இதுவே லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ருதுராஜ் எடுத்த அதிக ரன்கள்.

* லிஸ்ட் ஏ  கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 43 ரன்கள் எடுத்தது இதுவே முதல்முறை அல்ல. 2018-ல் ஹேமில்டனில் நடைபெற்ற தி ஃபோர்ட் கோப்பைக்கான நார்தர்ன் டிஸ்டிரிக்ட்ஸ் - சென்ட்ரல் டிஸ்டிரிக்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் நார்தர்ன் டிஸ்டிரிக்ட்ஸ் அணியைச் சேர்ந்த ஹாம்ப்டன் - கார்டர் ஆகிய இருவரும் ஒரு ஓவரில் 43 ரன்கள் எடுத்தார்கள். ஹாம்ப்டன் 23, கார்டர் 18 ரன்கள். எனவே இதன் சாதனையை ருதுராஜ் இன்று சமன் செய்துள்ளார். 

* லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 7 சிக்ஸர்கள் அடித்த முதல் பேட்டர், ருதுராஜ். 

* லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இரட்டைச் சதமெடுத்த 11-வது இந்தியர், ருதுராஜ். ஒட்டுமொத்தமாக 39 இரட்டைச் சதங்கள். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் அடித்த இரட்டைச் சதங்களில் இதற்கு 5-வது இடம். சமீபத்தில் தமிழக வீரர் ஜெகதீசன் அதிகபட்சமாக 277 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்தார். 

* லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஓர் ஆட்டத்தில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள்

ருதுராஜ் - 16 சிக்ஸர்கள்
ரோஹித் சர்மா - 16 சிக்ஸர்கள் 

* விஜய் ஹசாரே போட்டியில் ஓர் ஆட்டத்தில் அதிக சிக்ஸர்கள்

1. ருதுராஜ் - 16 சிக்ஸர்கள்
2. ஜெகதீசன் - 15 சிக்ஸர்கள்

விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் கடைசியாக விளையாடிய கடைசி 8 ஆட்டங்களில் ஒரு இரட்டைச் சதம், 5 சதங்கள் அடித்துள்ளார் ருதுராஜ். அதன் விவரங்கள்

136 vs மத்தியப் பிரதேசம்
154* vs சத்தீஸ்கர் 
124 vs கேரளம் 
21 vs உத்தரகண்ட் 
168 vs சண்டிகர் 
124* vs ரெயில்வே 
40 vs பெங்கால் 
220* vs உத்தரப் பிரதேசம் (இன்று) 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com