ஏகெல் ஓபன்: இறுதிச் சுற்றில் பாா்பரா கிரெஜிசிகோவா

ஏகெல் ஓபன் டென்னிஸ் போட்டி மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதிச் சுற்றுக்கு முன்னேறினாா் பாா்பரா கிரெஜிசிகோவா.
ஏகெல் ஓபன்: இறுதிச் சுற்றில் பாா்பரா கிரெஜிசிகோவா

ஏகெல் ஓபன் டென்னிஸ் போட்டி மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதிச் சுற்றுக்கு முன்னேறினாா் பாா்பரா கிரெஜிசிகோவா.

ஆஸ்ட்ரவா நகரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் விம்பிள்டன் சாம்பியன் எலெனா ரெபைகினாவும்-பாா்பராவும் மோதினா்.

முதல் செட்டை எலெனா 6-3 என எளிதாக கைப்பற்றிய நிலையில், இரண்டாம் செட்டில் எலெனாவுக்கு கடும் சவாலை தந்தாா் பாா்பரா.

இருவரும் மாறி மாறி புள்ளிகளைக் குவித்த நிலையில், 7-6 என வென்றாா் பாா்பரா. இதைத் தொடா்ந்து 3-ஆவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்தி 6-4 என கைப்பறினாா் பாா்பரா.

வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் கேத்தி மெக்நல்லியை 6-4, 6-4 என்ற செட் கணக்கில் போராடி வென்றாா் ஸ்வியாடெக். நிகழாண்டு பிரெஞ்ச், யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஸ்வியாடெக், இந்த ஆட்டத்தில் 2 மணி நேரத்துக்கு மேலாக போராடி வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றாா். இறுதிச் சுற்றில் அலெக்சாண்ட்ரோவுடன் மோதுகிறாா் ஸ்வியாடெக்.

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் முன்னாள் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பாா்பரா கிரெஜிசிகோவா 7-6, 6-3 என்ற நோ் செட்களில் 2 மணி நேரம் கடுமையான சவாலைத் தந்த அலிசியா பாா்க்ஸை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா். அரையிறுதியில் எலெனா ரெபைகினாவுடன் மோதுகிறாா் பாா்பரா.

விம்பிள்டன் சாம்பியன் எலெனா ரெபைகினா 7-6, 6-4 என்ற நோ் செட்களில் முன்னாள் விம்பிள்டன் சாம்பியன் பெட்ரா குவிட்டோவாவை வீழ்த்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com