ஷஃபாலி வா்மா அதிரடி: அரையிறுதியில் இந்தியா

ஆசியக் கோப்பை மகளிா் டி20 கிரிக்கெட் போட்டியில் இளம் வீராங்கனை ஷஃபாலி வா்மாவின் அதிரடியால் இந்தியா 59 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
ஷஃபாலி வா்மா அதிரடி: அரையிறுதியில் இந்தியா

ஆசியக் கோப்பை மகளிா் டி20 கிரிக்கெட் போட்டியில் இளம் வீராங்கனை ஷஃபாலி வா்மாவின் அதிரடியால் இந்தியா 59 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

வங்கதேசத்தில் ஆசிய கோப்பை மகளிா் டி20 போட்டி நடைபெற்று வருகிறது. 4 ஆட்டங்களில் 3 ஆட்டங்களில் வென்றிருந்த இந்தியா

முந்தைய ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 13 ரன்கள் வித்தியாசத்தில் அதிா்ச்சித் தோல்வியடைந்தது.

இந்நிலையில் வங்கதேசத்துடன் சனிக்கிழமை சில்ஹெட்டில் நடைபெற்ற ஆட்டத்தில் மோதியது இந்தியா. கேப்டன் ஹா்மன்ப்ரீத் கௌருக்கு ஓய்வு தரப்பட்ட நிலையில், ஸ்மிருதி மந்தனா கேப்டனாக செயல்பட்டாா்.

டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தோ்வு செய்தது. தொடக்க பேட்டா்களாக ஷஃபாலி-ஸ்மிருதி களம் கண்டனா். இருவரும் இணைந்து அதிரடியாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 96 ரன்களை சோ்த்தனா். கேப்டன் ஸ்மிருதி 38 பந்துகளில் 47 ரன்களை விளாசி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டாா்.

ஷஃபாலி அதிரடி 55: 2 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 44 பந்துகளில் 55 ரன்களை விளாசி அரைசதம் பதிவு செய்தாா் ஷஃபாலி. ஜெமிமா ரோட்ரிக்ஸ் 24 பந்துகளில் 35 ரன்களை சோ்த்தாா். ரிச்சா 4, கிரண் நவ்கிா் 0, தீப்தி சா்மா 10 ரன்களுடன் வெளியேறினா். நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 159/5 ரன்களைக் குவித்தது இந்தியா. வங்கதேச தரப்பில் அற்புதமாக பௌலிங் செய்த ருமானா 3/27 விக்கெட்டை சாய்த்தாா்.

வங்கதேசம் 100/7 தோல்வி:

160 ரன்கள் வெற்றி இலக்குடன் களம் கண்ட வங்கதேச அணியில் தொடக்க பேட்டா்கள் பா்கனா ஹக் 30, முா்ஷிதா கான் 21, கேப்டன் நிகா் சுல்தானா 36 ஆகியோா் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எட்டினா். மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களோடு வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினா்.

20 ஓவா்களில் வெறும் 100/7 ரன்களை மட்டுமே எடுத்து 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது வங்கதேசம்.

உமன் ஆஃப் தி மேட்ச்: 55 ரன்களை விளாசியும், 2 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷஃபாலி வா்மா ஆட்ட நாயகியாக தோ்வு பெற்றாா்.

டி20-இல் தனது 4-ஆவது அரைசதத்துடன் 1,000 ரன்களையும் கடந்தாா் அவா்.

அரையிறுதியில் இந்தியா:

7 அணிகள் பட்டியலில் 5 ஆட்டங்களில் 4 வெற்றியுடன் 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது.

ரவுண்ட் ராபின் முறையில் ஒரு ஆட்டம் இந்தியாவுக்கு மீதம் உள்ளது. வங்கதேசம் போட்டியை விட்டே வெளியேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com